வெற்றிமாறனை அழவைத்த விஜய்சேதுபதி?!.. விடுதலை 2 திரைப்படத்தில் நடந்த சம்பவம்!.. ஓ இதான் விஷயமா!...

by ramya suresh |
viduthalai2
X

viduthalai2

விடுதலை 2 திரைப்படத்தின் கடைசி நாள் சூட்டிங்கில் விஜய் சேதுபதி வெற்றிமாறனை அழ வைத்துவிட்டாராம்.

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படத்தில் சூரி உடன் இணைந்து விஜய் சேதுபதி, ராஜுமேனன், சேத்தன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும் இப்பொழுது இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

இதையும் படிங்க: விஜய், ரஜினி எல்லாம் ஓரமா போங்க!… அமரன் படத்தின் புதிய சாதனை?!… நம்பர் 1-ல் எஸ்கே!…

விடுதலை முதல் பாகத்தில் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் பல்வேறு விருது விழாவில் பாராட்டுகளை பெற்றது.. இதனால் விடுதலை பாகம் 2 எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தார்கள் முதல் பாகத்தில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரம் மிகச் சிறிய அளவில் காட்டப்பட்டிருக்கும்.

இதனால் இரண்டாவது பாகம் முழுக்க முழுக்க விஜய் சேதுபதியை மையமாக வைத்து இருக்கும் என்று கூறப்படுகின்றது. மேலும் இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதியின் கடந்த கால வாழ்க்கை குறித்த படமாக இது இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிகை மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப், கிஷோர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

Viduthalai

Viduthalai

படம் இந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் இரண்டுமே நவம்பர் 26ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முதல் சிங்கிள் தினம் தினமும் என்ற பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு இன்று முழுவதும் முடிவடைந்து விட்டது. இன்று படத்தின் கடைசி நாள் என்பதால் வெற்றிமாறன் அனைத்து உதவி இயக்குனர்களையும் படத்தில் வேலை செய்தவர்களையும் பேச சொல்லி இருக்கின்றார். அப்போது அனைவரும் இப்படம் குறித்து மிக உருக்கமாக பேசினார்களாம்.

இதையும் படிங்க: Lubber Pandhu: படம் ஹிட்டுனா கிஃப்ட் கொடுப்பாங்க! லப்பர் பந்து பட இயக்குனருக்கு நேர்ந்த சோகம்.. பெரிய மோசடி

அது மட்டுமில்லாமல் நடிகர் விஜய் சேதுபதி இப்படம் குறித்து கிட்டத்தட்ட 45 நிமிடம் பேசி வெற்றிமாறனை அழ வைத்து விட்டாராம். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் செட்டில் இருந்த அனைவருக்கும் உருக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. கட்டாயம் விடுதலை 2 திரைப்படம் விடுதலை படத்தின் முதல் பாகத்தை விட சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

Next Story