
Cinema News
ப்பா என்னா மனுஷன்யா.?! ஷூட்டிங் ஸ்பாட்டில் லோகேஷுக்கு சொல்லி கொடுத்த விஜய் சேதுபதி.!
இந்திய சினிமாவிலேயே தற்போது மிகவும் பிஸியான நடிகர் யார் என தேடினால், அதில் விஜய் சேதுபதி பெயர் முதன்மையானதாக இருக்கும். அந்தளவுக்கு மொழிகள் கடந்து பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.
இவர் இயக்குனர்கள் எதனை கூற சொல்கிறார்களோ, அதனை அப்படியே கூறும் ஆள் கிடையாது. இயக்குனர் கூறுவதை தனக்கு ஏற்றமாதிரி சிலவற்றை மாற்றி ரசிகர்களுக்கு பிடிக்கும் வண்ணம் செய்து விடுவார் அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிடும்.
இதையும் படியுங்களேன் – ஷங்கரை பார்த்து சூடு போட்டு கொண்டேனோ.?! அந்த ஒரு படத்தால் மிரண்டு போன மெகா ஹிட் இயக்குனர்.!
அப்படிதான், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் , மாஸ்டர் படத்தின் இன்டெர்வல் காட்சியில் விஜய் சேதுபதியிடம் ஐ யம் வெயிட்டிங் என கூற சொல்லியிருப்பார். அது விஜயின் வழக்கமான மாஸ் டயலாக்.
இதனை அறிந்த விஜய் சேதுபதி, உடனே , நான் வேறு மாதிரி கூறுகிறேன் என கூறி, ‘ வாத்தி நான் சொல்லப்போவது உனக்கு புதுசில்லை. இருந்தாலும் நான் சொல்றேன் நீ கேளு, ஐ யம் வெயிட்டிங் என கூறுவார். ‘ இது ரசிகர்களுக்கு புதுசாகவும், விஜய் சேதுபதி ஸ்டைலில் இருந்தது. மிகவும் ரசிக்க வைத்தது.