சம்பளத்தை குறைத்தும் இயக்குனரின் கோபம் காரணமாக பட வாய்ப்பை இழந்த விஜய் சேதுபதி....!
ஒரு தமிழ் நடிகராக இருந்தாலும் தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஆல்ரவுண்டராக வலம் வரும் நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். படங்களில் விஜய் சேதுபதி நடிப்பதில்லை அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்று தான் பலரும் இவரை பாராட்டி வருகிறார்கள்.
அதன் காரணமாகவே விஜய் சேதுபதியின் கால்ஷீட் டைரி எப்போதும் நிரம்பி வழிகிறது. தற்போது கூட மனுஷன் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். ஆனால் இத்தனை படங்கள் கிடைத்தாலும் தனது கனவு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கைநழுவி போனதை நினைத்து விஜய் சேதுபதி வருந்துகிறாராம்.
அதாவது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி கேரக்டரில் நடிக்க மணிரத்னம் முதலில் விஜய் சேதுபதியை தான் கேட்டாராம். இருவரும் ஏற்கனவே செக்க சிவந்த வானம் படத்தில் இணைந்து பணியாற்றிய நிலையில் இந்த படத்திலும் நடிக்க அழைப்பு விடுத்துள்ளார்.
முதலில் விஜய் சேதுபதி கேட்ட சம்பளம் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒத்துவராத காரணத்தால் சம்பளத்தை குறைக்குமாறு தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. அதன்படி கொடுக்கும் சம்பளத்தில் நடிக்க விஜய் சேதுபதியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஆனால் செக்க சிவந்த வானம் படத்தின் வெற்றிக்கு விஜய் சேதுபதி தான் காரணம் என பேசப்படுவதாக கேள்விப்பட்ட மணிரத்னம் கடுப்பில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த கேரக்டரில் கார்த்தியை நடிக்க வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி சினிமாவில் நுழைவதற்கு முன்பு பொன்னியின் செல்வன் நாடக கதாபாத்திரம் போன்ற உடை அணிந்து தான் தனது முதல் போட்டோ சூட்டை நடத்தியுள்ளார். அதனால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதை நினைத்து தற்போதும் வருந்தி வருவதாக கூறப்படுகிறது.