“இனி ஹீரோவா நடிக்கமாட்டேன்”… வடிவேலு எடுத்த அதிரடி முடிவுக்கு டிவிஸ்டு வைத்த விஜய் சேதுபதி…
தமிழ் சினிமா ரசிகர்களின் நகைச்சுவை புயலாக திகழ்ந்து வரும் வடிவேலு, கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாகவும், அதிமுகவுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வந்தார். குறிப்பாக விஜயகாந்த்தை கடுமையாக விமர்சித்தும் வந்தார்.
எனினும் அந்த தேர்தலில் அதிமுக அமோக வெற்றியை பெற்றது. அதன் பின் வடிவேலு சினிமாக்களில் நடிப்பதை குறைத்தைக்கொண்டே வந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு “இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் வடிவேலு. ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு திடீரென நின்றுப்போனது.
வடிவேலு படப்பிடிப்பிற்கு சரியான முறையில் ஒத்துழைக்காத காரணத்தால் தனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அப்புகாரை தொடர்ந்து வடிவேலு திரைப்படங்களில் நடிக்க ரெட் கார்ட் போடப்பட்டது.
எனினும் கடந்த வருடம் வடிவேலு மீது போடப்பட்டிருந்த ரெட் கார்ட் நீக்கப்பட்டதை தொடர்ந்து “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”, “மாமன்னன்”, “சந்திரமுகி 2” ஆகிய திரைப்படங்களில் நடிக்க வடிவேலு ஒப்பந்தமானார். இந்த நிலையில் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியானது.
“நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் அவ்வளவாக ரசிகர்களை ஈர்க்கவில்லை எனவும், படம் ரசிகர்களை கவரவில்லை எனவும் பல விமர்சனங்கள் எழுந்தன. ஆதலால் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்திற்கு வரவேற்பு குறைந்தது.
“நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்த வடிவேலு இனிமேல் ஹீரோவாக நடிக்கப்போவதில்லை எனவும், இனி வரும் திரைப்படங்களில் காமெடி ரோல்களில் மட்டுமே நடிக்கப்போவதாகவும் முடிவெடுத்தாராம்.
இதையும் படிங்க: படம் ஓடாதுன்னு ரஜினியிடமே சொன்ன டான்ஸ் மாஸ்டர்… இருந்தாலும் இவ்வளவு தைரியம் ஆகாதுப்பா!..
இதனிடையே ஆறுமுகக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த ஒரு புதிய திரைப்படத்தில் வடிவேலு நடிக்க இருந்ததாக ஒரு தகவல் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்திருந்தது. இந்த நிலையில் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்திற்கு கிடைத்த மோசமான வரவேற்பை பார்த்த விஜய் சேதுபதி படக்குழுவினர், வடிவேலுவை அந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று எடுத்த முடிவை திரும்ப பெற்றுக்கொண்டதாம்.
“நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படம் நன்றாக ஓடும் எனவும், வடிவேலுவை வைத்து நல்ல வியாபாரம் பார்த்துவிடலாம் என்ற காரணத்திற்காகவும்தான் விஜய் சேதுபதி படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க முடிவெடுத்தனராம். ஆனால் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தின் வரவேற்பை பார்த்த படக்குழு வடிவேலுவை நடிக்க வைக்க வேண்டாம் என முடிவெடுத்துவிட்டதாம்.