நானே ராஜா நானே மந்திரி… வொர்க் அவுட் ஆகுமா இந்த மேஜிக்.. விஜய் சேதுபதி படத்தில் நடந்த ட்விஸ்ட்..!

Vijay Sethupathi: தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் நாலு, அஞ்சு படங்களில் நடித்த பெருமை விஜய் சேதுபதியையே சேரும். அவர் நடிப்பில் உருவான எல்லா படங்களும் ஹிட் அடிக்காமல் போக ரூட்டை மாற்றினார். தற்போது அவரின் பழைய பார்முலாவுக்கு திரும்பி இருப்பது குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வந்தவர் விஜய் சேதுபதி. ஆனால் நிறைய படங்கள் தோல்வியை சந்திக்க அவர் வில்லனாக களமிறங்கினார். தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார்களான விஜய், ரஜினி, கமல் என எல்லாருடனும் சண்டை செய்து மாஸ் காட்டினார்.
இதையும் படிங்க: நிச்சயம் முடிந்த பெண்ணிடம் ஏடாகூடமா பேசிய சந்திரபாபு… மானத்தை வாங்கிய பெண்ணின் தந்தை…
சமீபத்தில் வெளியான ஜவான் படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து இனி நான் வில்லனாக நடிக்க மாட்டேன் என அவர் சொன்ன தகவல் பலருக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது. நிறைய அட்ஜஸ்ட் செய்ய வேண்டி இருக்குது. பல நாயகர்கள் தங்கள் இமேஜை டேமேஜ் செய்யகூடாது எனவும் சொல்வதாக கூறி இருந்தார்.
இதனால் மீண்டும் ஹீரோ மோடுக்கு மாறி இருக்கும் அவர் மிஸ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ட்ரையின் என பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இப்படம் அடுத்த வருட நவம்பர் அல்லது டிசம்பரில் ரிலீஸ் ஆகலாம். இப்படத்தில் மிஸ்கின் தான் இசையமைப்பு செய்ய இருக்கிறார்.
இதையும் படிங்க: A சர்டிபிகேட்தான் இப்போ டிரெண்டே!.. அனிமலை தொடர்ந்து பிரபாஸ் படத்துக்கும் அதேதானாம்!..