ரெண்டு பிசாசு சேர்ந்தா எப்படி இருக்கும்...? விஜய்சேதுபதியை அப்படி ஒரு கோணத்தில் காட்ட துடிக்கும் மிஸ்கின்..!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வித்தியாசமான பாதையை அமைத்துக் கொண்டு ரணகளமாக ஓடிக்கொண்டிருக்கும் இயக்குனர் மிஸ்கின். வித்தியாசமான கோணத்தில் கதை, திரைக்கதை அமைப்பதால் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு.
இவரின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சைக்கோ படம் முற்றிலும் யாரும் எதிர்பார்க்காத வித்தியாசமான கதைகளமாகும். திரில்லர் கலந்த கதைகளை இயக்கி மக்களிடயே சைக்கோ இயக்குனர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.
இவரது இயக்கத்தில் வெளிவராமல் இருக்கும் படம் பிசாசு-2. இந்த படம் கூடிய சீக்கிரம் திரைக்கு வரவிருக்கிறது. படத்தில் நடிகை ஆண்டிரியா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். இந்த படத்திற்கு முன்பாக விஜய் சேதுபதிக்கும் மிஸ்கினுக்கும் ஒரு மனஸ்தாபம் இருந்தது.
அதை என்னுடைய தப்பு என்றே மிஸ்கின் வருந்தி கூறினார். இந்த நிலையில் விஜய் சேதுபதியை வைத்து ஒரு புது முயற்சியில் இறங்க போவதாக மிஸ்கின் தெரிவித்தார். அதாவது இதுவரை யாரும் எந்த படத்திலும் எடுக்காத சண்டை காட்சியை விஜய் சேதுபதியை வைத்து எடுக்க போவதாக தெரிவித்தார். என் அடுத்த படத்தில் இது கண்டிப்பாக நடக்கும் எனவும் அதற்கான முயற்சியில் இறங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.