Connect with us
banner

விஜய் சேதுபதி செஞ்ச காரியத்தால் நொந்து கொண்ட இயக்குனர்கள்.! நீங்க இப்படி பட்டவரா…?

Cinema News

விஜய் சேதுபதி செஞ்ச காரியத்தால் நொந்து கொண்ட இயக்குனர்கள்.! நீங்க இப்படி பட்டவரா…?

ஒரு நல்ல நடிகராக இருந்தால் எப்படி பட்ட கதாபாத்திரத்தில் நமது திறமையை காட்டினாலும் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதற்கு தற்போதைய சிறந்த உதாரணம் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக தான் நடிக்க வேண்டும் என்பதில்லை கொடூர வில்லனாக நடித்தாலும் ரசிகர்கள் ரசிப்பார்கள்.

அதனால் தான் அவரை மொழிகள் கடந்து விஜய் சேதுபதிதான் எங்கள் படத்திற்கு வேண்டும் என பலரும் கால்ஷீட் கேட்டு வருகின்றனர். தமிழை போல தற்போது ஹிந்தியில் 4,5 திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

ஆதலால், புதியதாக வரும் இயக்குநர்களிடம், அது அவருடன் ஏற்கனவே பணியாற்றிய நட்பு வட்டார இயக்குனராக இருந்தாலும் சரி, கால்ஷீட் கேட்டால் இன்னும் 3 வருடத்திற்கு பிசி. அதனால் அதற்கப்புறம் தருகிறேன். என கூறி விடுகிறாராம்.

இதையும் படியுங்களேன் – என் முகத்தில் நானே துப்புவதா.?! உணர்ச்சிவசப்பட்ட ஆண்டவர்.! அதிர்ந்து போனது அரங்கம்…

சரி எல்லாரிடம் இதைத்தான் சொல்கிறார் என பார்த்தால், விக்ரம் வேதா எனும் காலத்தால் அழியாத கேங்ஸ்டர் காவியம் கொடுத்த புஷ்கர் – காயத்ரி ஆகியோர் கதை கூறினால் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். எப்போனு சொல்லுங்க அதற்கு தகுந்தாற் போல கால்ஷீட் அட்ஜஸ்ட் செய்துக்கலாம் என கூறி விட்டாராம்.

ஏற்கனவே மறக்க முடியாத ஹிட் கொடுத்த கூட்டணி என்றோ, அல்லது   அவர்களுக்கே பலவித பாலிவுட் கமிட் மென்ட் இருக்கிறது அதனால் அவர்களும் வருவதற்கு 2 ஆண்டுகள் ஆகிவிடும் என்ற தைரியத்தால் விஜய் சேதுபதி ஓகே கூறினாரா என தெரியவில்லை. அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் இதெல்லாம் தெரியவரும்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top