மிஷ்கினை டீலில் விட்ட விஜய் சேதுபதி! இனிமே நடிப்பு மட்டும்தானா?!.. கட்டிப்பிடி பாசமெல்லாம் சும்மாவா?..

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி வருபவர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். அதன்பின் அஞ்சதே, முகமூடி, துப்பறிவாளன், சைக்கா, பிசாசு உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை சொல்லியாக வலம் வருபவர் இவர்.

ஒரு நடிகரை நாம் எதிர்பார்த்திராத வேடத்தில் நடிக்க வைப்பது இவரின் ஸ்பெஷல் ஆகும். அஞ்சாதே படத்தில் பாண்டியராஜனை வில்லனாக நடிக்க வைத்திருப்பார். இயக்குனர் அமீரை வைத்து குத்து பாட்டு எடுப்பார். இப்படி பல பரிசோதனை முயற்சிகளை சினிமாவில் செய்து பார்த்தவர்தான் மிஷ்கின்.

இதையும் படிங்க: வாய்ப்பே இல்ல!.. அதை மட்டும் பண்ணவே மாட்டேன்!.. விஷால் விவாகரத்தில் புலம்பிய மிஷ்கின்…

ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. எனவே, ஒருபக்கம் சினிமாவிலும் மிஷ்கின் நடிக்க துவங்கிவிட்டார். சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், சுட்டு பிடிக்க உத்தரவு, மாவீரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

குறிப்பாக லோகேஷ் கனகரஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்திலும் மிஷ்கின் நடித்துள்ளார். எங்கே முழு நேர நடிகராக மாறிவிடுவாரோ என ரசிகர்கள் நினைத்த நினையில் தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். அதாவது ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். அதற்கான கதையையும் எழுதி முடித்துவிட்டார்.

இதையும் படிங்க: ஷங்கரையே பின்னுக்கு தள்ளிய அட்லீ! ‘ஜவான்’ படம் 300 கோடினு சொல்றதெல்லாம் பொய்யா?!..

இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், பல திரைப்படங்களில் நடித்து வருவதால் மிஷ்கின் படத்திற்கு அவரால் கால்ஷீட் கொடுக்கமுடியவில்லை. எனவே, விஜய் சேதுபதிக்காக காத்திருந்து மிஷ்கின் வெறுத்து போய்விட்டாராம்.

எனவே, வேறு ஹீரோவை வைத்து எடுக்கலமா எனவும் யோசித்து வருகிறாராம். விஜய் சேதுபதி சினிமாவில் வாய்ப்பு தேடியபோது அவரை திட்டி அனுப்பியவர்தான் மிஷ்கின். ஆனால், இப்போது விஜய் சேதுபதி வேறு இடத்தில் இருக்கிறார். ஆனாலும், மிஷ்கினை பார்க்கும் போதெல்லாம் கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடிக்க வைக்க நெருங்கிய கோலிவுட் இயக்குனர்கள்… கறாராக சாரி சொன்ன ஜேசன் சஞ்சய்!

 

Related Articles

Next Story