விஜய் சேதுபதி மட்டும்தான் நடிகரா...நாங்களாம் கண்ணுக்கு தெரியலயா..? கடுப்பில் பேசிய பாய்ஸ் பட நடிகர்..
ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இந்த படத்தில் சார்மிங்கா கல்லூரி மாணவனாக நடித்து இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். ஆனால் இந்த படத்திற்கு பிறகு சொல்லும் படியாக எந்த படமும் அமையவில்லை.
தொடர்ந்து படவாய்ப்புகள் வந்தாலும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் நட்சத்திர அந்தஸ்தை பெற இயலவில்லை. விஜய் சேதுபதியுடன் ஜிகர்தண்டா என்ற படத்தில் நடித்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பாபிசிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இந்தப் படத்திற்காக தேசிய விருது கிடைத்தது.
இந்த நிலையில் ஒரு மேடையில் பேசிய சித்தார்த் தமிழ் சினிமாவின் மீதுள்ள தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர் பேசுகையில் ஜிகர்தண்டா படம் முடிந்தபிறகு அந்த படத்தின் இயக்குனரிடம் வேறு எதாவது படம் பண்ணலாமா என்று கேட்டாராம். ஆனால் இயக்குனரோ அடுத்த படம் விஜய்சேதுபதி நடிக்கிறார் என கூறி விட்டாராம்.
சூதுகவ்வும் படத்தின் இயக்குனரிடமும் கேட்க அவரும் என் அடுத்த படம் விஜய் சேதுபதி என்று சொல்லிவிட்டாராம். இன்னொரு நண்பரான கார்த்திக் என்பவரிடமும் கேட்க இவரும் விஜய் சேதுபதியுடன் படம் பண்ணுகிறேன் என கூறிவிட்டாராம். உடனே கடுப்பில் சித்தார்த் ஏன் தமிழ் சினிமாவில் அவரை தவிர யாரும் இல்லையா? நாங்கள் எல்லாம் கண்ணுக்கு தெரியலயா? என ஆதங்கப்பட்டார்.