எந்த ஹீரோவும் எடுக்காத டிரெய்னிங்கா இருக்கே!.. விஜய் சேதுபதி செய்யுற வேலையை பாருங்க!...

by சிவா |   ( Updated:2024-08-19 12:05:56  )
vijay sethu
X

Vijay sethupathi: திரைப்படங்களில் எந்த ஹீரோயிசமும் காட்டாமல் இயல்பாக நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், ஆண்டவன் கட்டளை போன்ற படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் நல்ல கதாபாத்திரம் எனில் வில்லனாகவும் நடிப்பார்.

இதனாலேயே ரசிகர்களுக்கு இவரை பிடித்துப்போனது. பல படங்களில் சில காட்சிகளில் வரும் கேமியோ வேடத்திலும் நடித்திருக்கிறார். றெக்க, சங்கத்தமிழன் போன்ற சில படங்களில் கொஞ்சம் மசாலா கலந்த ஹீரோவாக நடித்தார். ஆனால், அந்த படங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

இதையும் படிங்க: அப்படிப்போடு… பிரசாந்துக்கு பொண்ணு ரெடி.. திருமண தேதி எப்போ தெரியுமா?

அதனின் வில்லனாக நடிக்க துவங்கினார். அதில் முக்கியமான படம் மாஸ்டர். அந்த படம் வெற்றி பெற விஜய் சேதுபதியின் நடிப்பும் முக்கிய காரணம். ஒருபக்கம், அட்லியின் இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வெளிவந்த ஜவான் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இப்போதும் சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வருகிறது. சமீபத்தில் வெளியான மகாராஜா படமும் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் இது.

இதையும் படிங்க: சூர்யாவின் பான் இண்டியா ஹீரோ கனவுக்கு ஆப்பு!.. வேட்டையன் மூலம் ஸ்கெட்ச் வைக்கும் ரஜினி…

இந்நிலையில், இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். இதற்காக கடந்த சில நாட்களாகவே மாவை பிசைந்து, பரோட்டாவை எப்படி போடுவது என பயிற்சி எடுத்து வருகிறாராம்.

விஜய் சேதுபதி போடும் பரோட்டாவை அந்த படக்குழுவினர் சாப்பிட்டு வருகிறார்களாம். விடுதலை 2 படத்தின் படப்பிடிப்புகள் தள்ளிப்போவதால் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர் விலகிவிட இப்போது விஜய் சேதுபதி நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story