யோகிபாபு காரை சுற்றி வந்து கும்பிட்ட பிரபல நடிகர்... அப்படி என்ன நடந்தது தெரியுமா?

by Akhilan |   ( Updated:2024-08-25 06:48:15  )
யோகிபாபு காரை சுற்றி வந்து கும்பிட்ட பிரபல நடிகர்... அப்படி என்ன நடந்தது தெரியுமா?
X

#image_title

Yogi Babu: இன்றைய தேதிக்கு தமிழில் ரொம்ப ரொம்ப பிஸியான நடிகர் என்றால் அது யோகி பாபுதான். லொள்ளு சபாவில் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தவருக்கு இன்று நிற்கக் கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார். உழைப்பால் உயர்ந்த யோகி பாபு மிகவும் எளிமையான மனிதரும் கூட...

தொடக்கத்தில் காமெடி மட்டுமே செய்துகொண்டிருந்தவரின் குணச்சித்திர பக்கத்தையும் கோமாளி இயக்குநர் பிரதீப், தனது அடுத்தடுத்த இரண்டு படங்களில் காட்டினார். அதுவும் லவ் டுடேவில் யோகி பாபுவின் கேரக்டர் அவ்வளவு நெகிழ்வாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதேபோல், யோகி பாபுவின் சினிமா பயணத்தில் இன்னொரு முக்கியமான படம் என்றால் அது மண்டேலா.

இதையும் படிங்க: இவ்ளோ பேர் பாராட்டியும் கலெக்‌ஷன் இவ்வளவுதானா?!.. வாழை படத்தின் இரண்டு நாள் வசூல்!…

இப்படியான வாய்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் கமர்ஷியல் காமெடி என்கிற தனது வலுவான கோட்டையையும் அவர் விடுவதாக இல்லை. ஜெயிலரில் ரஜினியுடன் சர்க்காரில் விஜய்யுடன் அஜித்துடன் விஸ்வாசம் தொடங்கி இன்றைய வளர்ந்து வரும் வளர்ந்த ஹீரோக்கள் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் எல்லாம் நடித்து விட்டார்.

குறிப்பாக விஜய் சேதுபதி படங்களில் யோகி பாபு நடிக்கிறார் என்றால், அந்தப் படத்தில் அவருக்கு முக்கியமான ரோல் இருக்கும் என்றே சொல்லலாம். ஆண்டவன் கட்டளை படத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். சினிமா தாண்டி இருவரும் நெருங்கிய நண்பர்களும் கூட...

இதையும் படிங்க: எவிடெண்ட்ஸ் காட்டுங்க! கேள்வி கேட்ட நிருபரிடம் கொந்தளித்த மாரி செல்வராஜ்

தீவிர முருக பக்தரான யோகி பாபு படப்பிடிப்பின் இடைவெளிகள் கிடைக்கும்போதெல்லாம் முருகனை தரிசிப்பதை வழக்கமாகவே கொண்டிருக்கிறார். பிரபலமான முருகன் கோயில்கள் என்றில்லாமல், சிற்றூர்களில் இருக்கும் முருகன் கோயில்களுக்கெல்லாம் யோகி பாபு சென்றுவந்த வரலாறு உண்டு.

கடைசி விவசாயி படத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் நடந்திருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இவரின் கார் வந்துவிட்டாலே, இயக்குநர் மணிகண்டனும் விஜய் சேதுபதியும் இவரின் காரை சுற்றி வந்து கும்பிடுவார்களாம்.

காரணம் யோகி பாபுவின் எல்லா கார்களுமே குறைந்தது முருகனின் அறுபடை வீடுகளுக்குமே சென்று வந்திருக்குமாம். இதனாலேயே, நகரும் முருகன் கோயில் என்று சொல்லி அதைக் கும்பிடுவார்களாம் மணிகண்டனும் விஜய் சேதுபதியும்..!

Next Story