விஜய் சேதுபதி சொன்ன விஷயம்… விமலுக்கு அடித்த லக்.. பெரிய மனசுதான்!!

by Arun Prasad |   ( Updated:2022-09-26 13:09:00  )
விஜய் சேதுபதி சொன்ன விஷயம்… விமலுக்கு அடித்த லக்.. பெரிய மனசுதான்!!
X

நடிகர் விமல் தொடக்கத்தில் “கில்லி”, “கிரீடம்”, “குருவி” என பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். இவர் “பசங்க” திரைப்படம் மூலம்தான் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின் “களவாணி”, “தூங்கா நகரம்”, “கலகலப்பு”, “மஞ்சப்பை” என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த விமல், திடீரென காணாமல் போனார்.

தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்துவந்த விமல், அதே போல் திடீரென தொடர் ஃப்ளாப் படங்களாக கொடுத்து வந்தார். அவரது மார்க்கெட் அப்படியே சரிந்தது. இந்த நிலையில் தான் சமீபத்தில் “விலங்கு” என்ற வெப் சீரீஸ் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் விமல். அதனை தொடர்ந்து தற்போது ‘குலசாமி”, “தெய்வ மச்சான்” போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விமல் ஒரு பேட்டியில் “விஜய் சேதுபதி தான் பசங்க திரைப்படத்தில் ஒரு வாய்ப்பிருப்பதாக கூறினார். அப்போது நான் பெண் வேஷத்தில் ஒரு கதாப்பாத்திரம் நடித்துக்கொண்டிருந்தேன். ஆதலால் மீசை, தாடி எதுவும் இல்லாமல் இருந்தேன்.

இயக்குனர் பாண்டிராஜ் என்னை பார்த்து சரிவராது என்று சொல்லிவிட்டார். உடனே நான் அப்போது நடித்திருந்த ஒரு விளம்பரத்தை அவரிடம் காட்டினேன். அதை பார்த்தவுடன் தான் ஓகே சொன்னார்” என்று கூறினார்.

விஜய் சேதுபதியும் விமலை போல் தொடக்கத்தில் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் தான் நடித்து வந்தார். எனினும் அப்போதே தன்னுடைய நண்பர் விமலுக்கு உதவியது விஜய் சேதுபதியின் பெருந்தன்மையை காட்டுகிறது.

Next Story