உன் மூஞ்சிக்கு அவளோ காசு தர முடியாது.! விஜய் சேதுபதியை அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்.!

by Manikandan |
உன் மூஞ்சிக்கு அவளோ காசு தர முடியாது.! விஜய் சேதுபதியை அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்.!
X

தமிழ் சினிமாவில் நுழைவதற்கு எந்தவித பின்புலமும் இல்லாமல் உள்ளே நுழைந்து மிகவும் கஷ்டப்பட்டு மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் வெகு சிலரே. ஆனால் அப்படி கஷ்டப்பட்டவர்களுக்கு மட்டுமே மக்கள் அதற்கான உரிய அங்கீகாரம் கொடுத்துள்ளனர்.

அதில் தற்காலத்து உதாரணம் என்றால் அது விஜய் சேதுபதி தான். ஆரம்பத்தில் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் தலைகாட்டி தனது திறமையை வளர்த்து தற்போது இந்த நிலைமைக்கு வந்துள்ளார்.

இவர் ஆரம்ப காலத்தில் ஒரு தயாரிப்பாளர் இவரை அசிங்கப்படுத்தியதை ஒரு பேட்டியில் உருக்கமாக குறிப்பிட்டார். அதாவது, இவர் அப்போது புதுமுக நடிகராம். ஒரு படத்துக்கு கமிட் செய்ய கேட்டுள்ளனர். இவர் சரி ஒரு 7 லட்சம் கொடுங்க என கேட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன் - 11 கோடிக்கு கான்ஜூரிங் பேய் வீடு.! ஆனால், அது மட்டும் செய்ய கூடவே கூடாதாம்.!

உடனே , அதெல்லாம் முடியாது என கூறவும், சரி, அதில் பாதி கொடுங்கள் என சம்பளம் பேசியுள்ளனர். அதுவும் முடியாது என கூறவே, அப்போ நான் இலவசமா நடிச்சி தரேன். கதை கூற கூறுங்கள் என கடைசியில் சொல்ல, அதற்கு அந்த தயாரிப்பாளர் , கதையெல்லாம் கூற முடியாது அவரை வந்து நடிக்க சொல்லுங்க. என கூறவே, விஜய் சேதுபதி டென்ஷனாகிவிட்டாராம். உன் படமே வேண்டாம் என உதறித்தள்ளிவிட்டாராம்.

இந்த சம்பவத்தை மிகவும் வருத்தத்துடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு நேர்காணலில் தெரிவித்து இருந்தார்.

Next Story