சினிமாவில் களமிறங்க தயாராகும் குட்டி விஜய் சேதுபதி… இந்த வயசுலயே இப்படி ஒரு ஆசையா?

by Arun Prasad |   ( Updated:2023-04-18 05:45:45  )
Vijay Sethupathi
X

Vijay Sethupathi

விஜய் சேதுபதி தற்போது இந்திய சினிமாவின் மிக பிசியான நடிகராக வலம் வருகிறார். தற்போது ஹிந்தியில் “மெர்ரி கிருஸ்துமஸ்”, “மும்பைக்கார்”, “ஜவான்” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் “காந்தி டாக்ஸ்” என்ற மௌனத் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான “விடுதலை” திரைப்படத்தில் பெருமாள் வாத்தியார் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. அவரது நடிப்பு மிகவும் அபாரமாக இருந்ததாக ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

இவ்வாறு இந்திய சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதியின் மகனின் பெயர் சூர்யா சேதுபதி. விஜய் சேதுபதி நடித்த “நானும் ரௌடிதான்”, “சிந்துபாத்”, ஆகிய திரைப்படங்களில் சூர்யா சேதுபதி குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதே போல் “நடு சென்டர்” என்ற வெப் சீரிஸிலும் சூர்யா சேதுபதி நடித்துள்ளார்.

இந்த நிலையில் சூர்யா சேதுபதி விரைவில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளாராம். சூர்யா சேதுபதி தற்போது கல்லூரி படித்துக்கொண்டிருக்கிறார். இந்த இளம்வயதிலேயே அவரை ஹீரோவாக ஆக்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்திவிட்டாராம் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி 30 வயதில் பெரும் போராட்டத்திற்குப் பிறகு ஹீரோவாகவே நடிக்கத் தொடங்கினார். ஆனால் தனது மகனுக்கு அவ்வாறு நேர்ந்துவிடக்கூடாது என்றும் இளம்வயதிலேயே ஹீரோவாக அறிமுகப்படுத்திவிட வேண்டும் என்றும் நினைத்து இந்த முடிவை எடுத்துள்ளாராம் விஜய் சேதுபதி.

இதையும் படிங்க: உங்களை நான் பார்த்தே ஆகனும்- விஜய் வீட்டின் முன் கதறி அழுத பள்ளி மாணவி… தளபதி எடுக்கப்போகும் முடிவு என்ன?

Next Story