மக்களின் நம்பிக்கையை கெடுத்து வருகிறாரோ..? விஜய்சேதுபதிக்கு இது நல்லது இல்லை..மனக்குமுறலை வெளிப்படுத்திய இயக்குனர்...

நடிகர் விஜய் சேதுபதி- இன்றைக்கு ஒட்டு மொத்த சினிமாவிற்கே லட்டு போல சிக்கிய நடிகர் யாரென்றால் அது நம்ம மக்கள் செல்வன் தான். அனைத்து மொழி சினிமாவுமே இவரை தான் தேடி அலைந்து கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு இவரின் நடிப்பு பேசப்பட்டு வருகிறது.
மேலும் விக்ரம் நடிப்பில் இவரின் வில்லத்தனத்தை பார்த்து மிரளாதவர்களே இல்லை. அதை அப்படியே மாற்றிக் கொண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தில் மாமனிதனாகவே வாழ்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். கதாநாயகனாவே நடித்து மக்களிடம் ஆழமாக பதிந்த விஜய் சேதுபதி திடீரென தனது டிராக்கை மாற்றி வில்லனாக நடிக்க ஆரம்பித்தார்.
ஆனால் வில்லனாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்துதான் அவரின் மார்க்கெட்டே உயர்ந்தது என சொல்லலாம். இதை எல்லாம் பார்த்த அவரின் குருவும் இயக்குனருமான சீனு ராமசாமி மிகுந்த வருத்தத்தில் உள்ளார். உன்னை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அந்த முகத்தை இன்று பார்த்தாலே பயந்து ஓடுகிற அளவுக்கு மாற்றி விட்டாய் என கூறியுள்ளார்.
ஹீரோனா நீதிக்கு தான் சண்டை போடவேண்டும். அநீதிக்காக இல்லை. நீ ஹீரோ தான். நான் ஒரு நடிகன் என்று நினைத்து கொண்டு எந்த ஒரு கதாபாத்திரமானாலும் நடிப்பேன் என சொல்வது விஜய் சேதுபதிக்கு பொருந்தாது. ஏனெனில் மக்கள் அவரை அப்படி பார்க்க வில்லை. அவர் நடிக்க வந்ததில் இருந்து அவர் மீது ஏதோ ஒரு அபரிதமான அன்பை கொட்டி வருகின்றனர் ரசிகர்கள். ஆனால் அதை அவர் கெடுத்து வருகிறாரோ என்று எனக்கு பயமாக இருக்கிறது என வருத்தமாக கூறினார்.