latest news

பார்வதி பற்றி பேச ஏதுமில்லை; சிம்பு, சூர்யா போன்ற நடிகர்கள் இருக்கும்போது… ” – ‘முத்து என்கிற காட்டான்’ விழாவில் விஜய் சேதுபதி கலகலப்பு!

விஜய் தொலைக்காட்சியில் வருகிற 27ம் தேதி ஸ்டீமிங் ஆகும் வெப் சீரிஸ் முத்து என்கிற காட்டான். விஜய் சேதுபதி முக்கிஅய் வேடத்தில் நடிக்கும் இந்த தொடரில் வி.ஜே.பார்வதி, மலையாள நடிகர் இர்ஷாத் அலி, மினிண்ட் சோமன், சிங்கம் புலி,முத்துகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த தொடரை கடைசி விவசாயி பட இயக்குனர் மணிகண்டன் இயக்குவதால் தொடர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான இத்தொடரின் டிரைலர் படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்தது.

இன்று இந்த வெப்சீரிஸ் தொடர்பான விழா நடைபெற்றது. விழவில் கலந்துகொண்ட விஜய்சேதுபதி பேசும்போது,

தமிழ் சினிமாவில் சிம்பு, சூர்யா என பல அனுபவம் வாய்ந்த முன்னணி நடிகர்கள் இருக்கும்போது, என்னை நம்பி பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் மாபெரும் பொறுப்பை வழங்கிய ஜியோ ஹாட்ஸ்டார் பிரதீப் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மேலும் அவர் பேசுகையில், வி.ஜே. பார்வதி பற்றிப் பேச இப்போது என்னிடம் ஏதுமில்லை. ஏனென்றால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரா வாரம் பாருகிட்ட பேசிப் பேசி எனக்கே சலித்துவிட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்த ரசிகர்கள் பலருக்கும் வி.ஜே. பார்வதி மீது அதிருப்தி இருக்கலாம். ஆனால், இந்த முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸைப் பார்த்த பிறகு, உங்கள் எண்ணம் மாறும்; கண்டிப்பாக உங்களுக்கு அவளைப் பிடிக்கும் என்று கூறினார்.

அதுமட்டுமின்றி இந்த வெப் சீரிஸில் முத்துக்குமரன் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். அவர் ஒரு மிகச்சிறந்த திறமைசாலி. இப்படிப்பட்ட திறமையான நடிகரான முத்துக்குமரனை, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான கார்த்திக் சுப்புராஜ் மற்றும் மணிகண்டன் ஆகியோரிடம் அறிமுகம் செய்து வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார் விஜய் சேதுபதி.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு முத்துக்குமரன் மற்றும் வி.ஜே. பார்வதி இருவரும் விஜய்சேதுபதியுடன் ‘முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸில் நடித்துள்ளது குறிப்பிடத்த்க்கது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

4 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

6 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

6 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

7 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

8 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

14 hours ago