Biggboss Tamil8: பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டு நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் கறாராக இருக்கிறேன் என்ற பெயரில் அவர்களிடம் மோசமாக நடந்து கொள்ளும் விஷயம் ரசிகர்களை கோபப்படுத்தி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த போது பெரிய அளவில் போட்டியாளர்களிடம் வரம்பு மீறி எதுவும் பேச மாட்டார். இருந்தும் தான் கேட்க வேண்டிய விஷயங்களை சரியாக கேட்டு அவர்களை லாக் செய்வதும் ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றது.
இதையும் படிங்க: விஜய் கட்சிக்கு அஜீத் ஆதரவு… சிம்பாலிக்கா சொல்லி தெறிக்க விட்டுட்டாரே…!
இருந்தும் பல ரசிகர்கள் கமல்ஹாசன் சில விஷயங்களை கேட்க தயங்குகிறார் என அவர் மீது குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டது. ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஓரளவுக்கு மேல் கேள்வி கேட்கக்கூடாது அது கேட்டால் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பது தற்போது பலருக்கு புரிந்திருக்கும் என்பது பிக் பாஸ் டீமின் கருத்தாக இருக்கிறது.
ஏனெனில் விஜய் சேதுபதி தொடங்கியதில் இருந்து மூக்கை உடைகிறேன் என்ற பெயரில் அளவுக்கு மீறி கேள்வி கேட்டு போட்டியாளர்களை தலைகுனிய செய்கிறார். இது ஆரம்பத்தில் பலரை ரசிக்கும் படி வைத்திருந்தாலும் தற்போது ரசிகர்களுக்கு இது முகச்சுளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
போட்டியாளர்களிடம் கூட அவர் தனக்கு பிடித்தவர் பிடிக்காதவர் என தரம் பிரித்து இருப்பது அப்பட்டமாக ரசிகர்களுக்கு தெரியவந்திருக்கிறது. அவர் ஒரு போட்டியாளரிடம் நீங்கள் தப்பு செய்வதாக கூறிவிட்டால் அவர்கள் அதை உடனே ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லை என்றாலும் கடைசியில் அவர்களை ஒப்புக்கொள்ள அவர் வைக்கும்படிதான் ஆட்டத்தை மடை மாற்றுவார்.
இதையும் படிங்க: விடுதலை 2-வில் வரலாற்றை திரித்து காட்டியிருக்கிறாரா வெற்றிமாறன்?!… பொங்கும் பிரபலம்!…
அதிலும் தற்போது போட்டியாளர்கள் போல மஞ்சரியை விஜய் சேதுபதி அதிக அளவில் விமர்சனம் செய்வது ரசிகர்களிடம் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. அவருக்கு மகளாக நடித்த சாச்சனாவை பாதுகாப்பதும், தவறோ சரியோ விளையாடும் மஞ்சரியை கேள்வி கேட்கிறேன் என அசிங்கப்படுத்துகிறார் எனவும் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.




