Connect with us

Cinema News

அதெல்லாம் சொல்லவே கூடாது.! வட்டி மட்டும் 10 கோடி., யாரும் இரக்கம் காட்டல.! கடும் கோபத்தில் விஜய் சேதுபதி.!

அண்மையில் வெளியான கே.ஜி.எப் 2 திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டது. அதாவது அங்கு பட பட்ஜெட்டில் பாதி தான் சம்பளமாம். மீதி படத்தை எடுக்க ஆகும் செலவாம். அதனால் தான் படத்தில் பிரமாண்டம் கொஞ்சம் கூட குறையாமல் தெரிகிறதாம்.

kgf2_cine

ஆனால், தமிழில், தமிழ் படங்களுக்கு என்று ஒதுக்கும் பட்ஜெட்டில் முக்கால்வாசி (சில சமயம் 80 – 90 சதவீதம் வரையில் ) படத்தில் வேலைபார்ப்பவர்களுக்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம். அதிலும் பெரும்பாலான பங்கு ஹீரோ சம்பளத்தில் சென்றுவிடுகிறதாம். அதனால், தான் படத்தில் படத்தின் பட்ஜெட் தெரிவதில்லை. படமும் நீண்ட காலம் ரசிக்கப்படுவதில்ல்லை என்கிற குற்றசாட்டு வந்துகொண்டே இருக்கிறது.

இதை ஒரு குற்றச்சாட்டாக பலரும் கூறிவருகின்றனர். இதற்கு பதிலடி கொடுத்து அண்மையில், நடிகர் விஜய் சேதுபதி ஒரு கருத்து தெரிவித்தார். இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் பட ப்ரோமோஷனில் கலந்துகொண்ட போது, இந்த கேள்வி கேட்கப்பட்டது.

இதையும் படியுங்களனே – பக்கா அரசியல்வாதி லுக்கில் முதலமைச்சரை சந்தித்த தளபதி விஜய்.! தீயாய் பரவும் லேட்டஸ்ட் வீடியோ..,

அவர் கூறியதாவது, ‘ நானும் எனது நண்பர் மணிகண்டனும் (கடைசி விவசாயி இயக்குனர் ) சேர்ந்து தான் கடைசி விவசாயி படம் தயாரித்தோம். லாக்டவுனில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. அதனால், மாத வட்டி மட்டுமே மொத்தமாக 10 கோடி கட்டினோம். அப்போது யாரும்  இரக்கம் காட்டவில்லை. லாக்டவுன் என்பதால் வட்டி குறைக்கவில்லை.

நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. என்னை வைத்து படம் எடுக்க சொல்வதில்லை. எனது மார்க்கெட் நிலவரம் தெரியும். அதற்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கலாம் என தெரியும். அதனை கொடுக்க முன்வருகிறார்கள். இந்த நடிகர் வேண்டாம் என்று அனைவரும் ஒதுங்கிவிட்டால், அவரே தனது சம்பளத்தை குறைத்துவிடுவார்.’ என்று தனது விளக்கத்தை தெளிவாக கூறினார் விஜய் சேதுபதி.

google news
Continue Reading

More in Cinema News

To Top