பார்ட்-2 எடுக்கும் விஜய் சேதுபதி.! 'இப்போயாவது அத செய்யுங்கள்' கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்.!

by Manikandan |
பார்ட்-2 எடுக்கும் விஜய் சேதுபதி.! இப்போயாவது அத செய்யுங்கள் கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்.!
X

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியாகி 90ஸ் கிட்ஸ் மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் "96". இந்த திரைப்படத்தில் ராம் கதாபாத்திரத்தின் விஜய் சேதுபதி சிறப்பாக நடித்திருந்தார்.

அதேபோல, ஜானு கதாபாத்திரத்தில் திரிஷா சிறப்பாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் விஜய் சேதுபதிக்கு ஓர் திரைப்படமாக அமைந்ததுஇந்த திரைப்படத்தில் அமைந்திருக்கும் பள்ளிப்பருவ காட்சிகளும் அதன் பின்னர் விஜய்சேதுபதி திரிஷா நடித்துள்ள காட்சிகள் என இரண்டும் சிறப்பாக அமைந்திருக்கும்.

vijay sethupathi

இதையும் படியுங்களேன்- வளர்ச்சினா இதுதான்டா வளர்ச்சி.! குக் வித கோமாளிக்கே இது பெருமிதம்.!

இறுதியில், கதையின் படி இருவரும் பிரிந்து செல்வது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்தபட்சம் இந்த படத்திலாவது விஜய்சேதுபதிக்கு காதல் கைகூடும் முறையில் காட்சி அமைக்குமாறு 96 படம் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ரசிகர்களின் கோரிக்கையை படக்குழு நிறைவேற்றுமா என பட அறிவிப்பு வெளியான பின் பார்த்துக்கொள்ளலாம்.

Next Story