mamanithan
விக்ரம் படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி படம் என்றதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்த எதிர்பார்ப்பை இந்தப்படமும் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்தப்படம் இந்த வார இறுதியில் திரையரங்கிற்கு வர உள்ளது. யதார்த்தமான வாழ்வியலை வெகு அழகாகவும் நேர்த்தியாகவும் சொல்லும் பாணியில் வந்துள்ளது மாமனிதன். இந்தப்படத்தில் நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
ஒருநாள் யுவன் வந்து நானும் எங்க அப்பாவும் மியூசிக் பண்றோம். நீங்க வந்து படம் பண்ணுங்கன்னாரு. எனக்கு அந்த விஷயம் ரொம்ப பிடிச்சது. இந்த மாதிரி ஒரு விஷயம் இருக்கணும்னா என்னோட குருநாதர் சீனு சார் இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அந்த கதை வந்து எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த அனௌன்ஸ்மெண்ட், டைட்டில் எல்லாம் வந்து ஒரு மரியாதைக்குரிய படமாக அமைஞ்சது. இந்தப்படம் கேட்டவுடனே எனக்குள்ள இம்ப்ரஸா ஆச்சு.
எல்லாரு வீட்டிலும் இருக்கிற அப்பா பத்தின ஒரு படம் தான் இது. அப்பா அம்மா ரெண்டு பேரையும் சொல்றேன். தன்னலம் பார்க்காம தன் பிள்ளைகளோட எதிர்காலத்தைப் பத்தியும், தன்னைப் பத்தி துளி கூட யோசிக்காத ஒரு தகப்பன், தாயைப் பத்தின படம். தன்னலம் பாராம மத்தவங்க மேல அன்பு செலுத்துற அத்தனை பேரும் மாமனிதர்கள் தான்.
நீங்க பர்ஸ்ட் ஒரு பாட்டு பார்த்துருப்பீங்க. அயிர மீனு கொழம்புன்னு. படம் ஆரம்பிச்சி பாட்டு முடிஞ்ச உடனேயே நாம எல்லாரும் தியேட்டர்ல இருக்கோம்கறத மறந்து அந்த வீட்ல ஒரு ஆளா மாறதுக்கான அத்தனை வாய்ப்புகளும் இருக்கு.
சீனு சார் எப்படின்னா நாம கண்ணுல பார்க்கறதை அதே உயிரோடு கடத்த முடியும்னு நிரூபிக்குற ஒரு இயக்குனர். ஏன்னா ஒவ்வொரு படம் பண்ணும்போது போட்டோகிராபி எப்படி இருக்கணும்னு ரெபரண்ஸ் வச்சிருப்பாரு. பண்ணுவாரு.
எப்படி இந்தப்படத்தைக் கொண்டு வரப்போறோம்னு ஒரு ரெபரன்ஸ் இருக்கும். அவரோட உழைப்பு அற்புதமா இருக்கும். அவரு படம் பண்ணும்போதெல்லாம் அந்தந்த இடத்துக்கு கூட்டிட்டுப் போயிடுவாரு. எளிய வசனங்கள். அவரு கூட நான் முதல் படத்தில இருந்து இப்ப வரைக்குமே அவரோட வசனங்கள ஒரு முறை இரண்டு முறைக்கு மேல படிக்க வேண்டிய தேவையே இல்லை.
அதை வசனம்னு சொல்லாம உரையாடல்தான். அவரோட உரையாடல் ரொம்ப சிம்பிளா இருக்கும். ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும். அப்பன் தோத்த ஊருல பிள்ளைங்க ஜெயிக்கறது சாதாரண விஷயம் கிடையாது…மிகப்பெரிய விஷயங்கள அழகா சிம்பிளா சொல்வாரு.
இந்தப்படம் ஒரு அற்புதமான சிந்தனையை சொல்லுது. வாழ்வியலை சொல்லுது. இப்போ இந்த மாதிரி படம் சிந்தனையை வாழ்வியல் கதையை எடுக்க அவரைத் தவிர யாருமே இல்லை. ஒரு படத்தை இவ்வளவு சிம்பிளாகவும், உயிரோடவும் பிரசண்ட் பண்றதுக்கு வேற யாரும் இருக்காங்களான்னு தெரியல.
அவர் படம் மாதிரி ரொம்ப தெளிவா இருக்கணும்னு நினைச்சு எடுப்பாரு. அவர் தொடர்ந்து படம் பண்ணிக்கிட்டே இருக்கணும். அந்த ரெஸ்பான்சிபிலிட்டி. தயாரிப்பாளர் போட்ட பணத்தை எடுத்துரணும்.
அவர் நாகரீகமான படமா…குடும்பத்தோட பார்க்கக்கூடிய படமாக இருக்கணும்ங்கறதுல ரொம்ப தெளிவா இருப்பாரு. அவரோட தொடர்ந்து பயணிக்கறதுல எனக்கு பெரும் மகிழ்ச்சி. இந்தப்படத்தை 55 நாள்கள் பிளான் பண்ணி 37 நாள்களில் எடுத்து முடிச்சோம்.
இந்தப்படத்துல காமிரா மேன் சுகுமாரப் பத்தி சொல்லணும். இயக்குனர் எவ்ளோ வேகத்துல இருக்காரோ அதே வேகத்துல இவரும் இருப்பார். ஷாட் ரெடியான்னு கேட்டதுமே ரெடின்னு சொல்வாரு.
அப்புறம் குருசோமசுந்தரம் நடிச்சிருக்காரு. நான் 2004ல் கூததுப்பட்டறைல சேர்ந்தேன். அப்போ நடிக்கறதுக்கு ரொம்ப ஆசையா இருக்கும். அப்போ சோமு நடிச்சாரு. அவருக்கிட்ட சோமு டயலாக் எல்லாம் எப்படி பேசுறீங்க…ன்னு நான் கேட்டேன். அவர் ரொம்ப சிம்பிளா சொன்னாரு. இன்னொருத்தர் எழுதுன வசனத்தை நம்ம வசனம் போல நம்ம பேசணும்னு சொன்னாரு.
எனக்கு அது புரியவே இல்ல. புரிய ரொம்ப வருஷமாயிடுச்சு. ஆனா அந்த லெசன் வந்து ரொம்ப முக்கியமான லெசன். அவரு நண்பனா நடிச்சதுல பெருமகிழ்ச்சி. கஞ்சா கருப்பு எதைச் சொன்னாலும் உடனே புரிஞ்சிக்கிட்டு நடிப்பாரு. அவரோட மெச்சூரிட்டியும், அறிவும் அழகு..
காயத்ரி எத்தனை முறை எத்தனை படம் நடிச்சாலும் சரி. இன்னமும் காய்த்ரியோட எத்தனை படம் நடிச்சாலும் அவங்க பிரசண்ட் பண்ற விதம் அற்புதம். மாமனிதன்ல வந்து குடும்பத்தலைவியாகவே அப்படியே நடிச்சிருப்பாங்க. ரெண்டு குழந்தைங்களுக்கு அவங்க அம்மாவா நடிச்சதை வந்து நிறைய பேரு ஒத்துக்கல. தைரியத்தோட நடிச்சாங்க.
மாமனிதன் வந்து படம் பார்த்துட்டு வந்த உடனே வேறொரு படத்தைப் பார்த்துட்டு வந்த பீல கொடுக்காது. இது நம்மோட கதையோ அல்லது நம்ம அப்பா அம்மாவோட கதையாகவோ தான் இருக்கும்ங்கற உணர்வைக் கொடுக்கும்.
விஜய் தொலைக்காட்சியில்…
பொங்கல் ரிலீஸாக…
தமிழ் திரையுலகில்…
ஒரு நடிகர்…
நடிகர் ஜீவா…