நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் புதிதாக ஒரு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அவ்வப்போது விஜய் சேதுபதி கால்ஷீட் தரும் நாட்களிலெல்லாம் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இயக்குனர் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, எம்ஜிஆர் மகன் ஆகிய படங்களை இயக்கி உள்ள நிலையில், அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து இயக்க உள்ள படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆனால் விஜய் சேதுபதி தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருவதால் மிகவும் பிஸியாக காணப்படுகிறார். இந்நிலையில் இயக்குனர் பொன்ராம் விஜய் சேதுபதியை வைத்து இயக்க உள்ள புதிய படத்திற்கு 25 நாள் கால்சீட் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் விஜய் சேதுபதி பத்து நாள் கால்ஷீட் தருவேன் அதற்குள் எடுத்து முடிங்க என கூறியுள்ளாராம். 25 நாள் படப்பிடிப்பிற்கு தேவைப்படும் நிலையில், பத்துநாள் தருகிறேன் என விஜய் சேதுபதி கூறியுள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் படக்குழுவினர் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்து, வெற்றிமாறனின், விடுதலை, கத்ரினா கைப் உடன் ஹிந்தி படம் பறந்து பறந்து நடித்து வருகிறார். அதனால் தான் இந்த 10 நாள் கெடு. 25 நாளில் எடுக்கவேண்டிய திரைப்படத்தை 10 நாளில் எடுத்தால் படம் எப்படி வருமோ என படக்குழு பயந்து போய் தான் உள்ளது. பார்க்கலாம் எனன நடக்கப்போகிறது என்று.
நடிகை பார்வதி…
நடிகை திரிஷா…
கங்குவா படம்…
நடிகர் சல்மான்…
Ajithkumar: நடிகர்…