சார் என்ன வச்சி ஒரு படம் எடுங்க ப்ளீஸ்.. விஜய் சேதுபதியே கெஞ்சிக்கேட்ட அந்த இயக்குனர்....

by சிவா |   ( Updated:2021-10-01 23:49:14  )
vijay sethupathi
X

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருப்பவர் விஜய் சேதுபதி. அலட்டிக்கொள்ளாத தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிகளை கொடுப்பவர். எனவே, மிகவும் அதிகமான திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் நடிகராக அவர் மாறியுள்ளார்.

vijay-sethupathi

ஒருபக்கம் சன் டிவியில் மாஸ்டர் செஃப் என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் அவர் நடத்தி வருகிறார். சினிமா, டிவி, ஓடிடிக்கான படங்கள், வெப் சீரியஸ், தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிப்படங்களில் நடிப்பது என எங்கு பார்த்தாலும் அவர் இருக்கிறார். இதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடிக்கும் லெவல் வரை சென்றது.

இதையும் படிங்க: விஜயின் மாஸான அறிமுக காட்சிக்கு மியூசிக் போடும் அனிருத்… தீயாய் பரவும் வீடியோ….

ஆனால், அவரது நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான லாபம், துக்ளக் தர்பார் மற்றும் அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. ஆனாலும், ரூ.15 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் சேதுபதி மாறியுள்ளார். அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கின்றனர்.

vijay-sethu4

அவரை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் கதைகளுடன் காத்திருக்கும் போது அதே நேரம் அவர் ஒரு இயக்குனரிடம் தன்னை வைத்து ஒரு படம் எடுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். அவர்தான் இயக்குனர் மிஷ்கின். மிஷ்கின் படங்களில் ஆழமான கதை இருக்கும். நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கும். இதை உணர்ந்தவர் விஜய் சேதுபதி.

myskin

மிஷ்கின் இயக்கிய ‘சைக்கோ’ படம் பார்த்து விட்டு மிரண்டு போனார் விஜய் சேதுபதி. அதில், ஒவ்வொரு காட்சியிலும் மிஷ்கின் கதை சொல்லி இருந்தார். எனவே, அவரை போனில் அழைத்து பாராட்டினேன்.

இதையும் படிங்க: அஜித் இப்படி மாறினதுக்கு அந்த சம்பவம்தான் காரணம்!… அவரே சொன்ன வீடியோ…..

அப்போது பிசாசு 2 படத்தில் எனக்கு ஏதேனும் காட்சி இருந்தால் சொல்லுங்கள். 2 நாட்கள் நடித்துக் கொடுக்கிறேன் என நானாகவே கேட்டு நடித்தேன் என விஜய்சேதுபதி கூறியிருந்தார். பிசாசு 2 படத்தில் 3 காட்சிகளில் அவர் நடித்துள்ளார்.

pisasu2

இந்நிலையில், எனக்காக ஒரு கதை பண்ணுங்க சார்.. படம் பண்ணுவோம் என அவராகவே மிஷ்கினிடம் கோரிக்கை வைத்துள்ளார். எனவே, விஜய் சேதுபதிக்காக ஒரு கதையை மிஷ்கின் உருவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story