More
Categories: Cinema News latest news

மான பிரச்சனை மனுஷனை நோகடிச்சுடுச்சு… தொடர் தோல்வியால் திடீர் முடிவெடுத்த விஜய்சேதுபதி!

விஜய்சேதுபதி

2010ம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதற்கு முன்னர் கூட்டத்தில் ஒருவராக பல படங்களில் நடித்து வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது.

விஜய்சேதுபதி

தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடி தான், சேதுபதி என பல ஹிட் படங்களில் தொடர்ச்சியாக நடித்து, அஜித் விஜய் லிஸ்டில் இடம் பிடித்தார். ஹீரோவாக மட்டுமல்லாது வில்லன், கெஸ்ட் ரோல் என எது கிடைத்தாலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் விஜய் சேதுபதிக்கு தற்போது கெட்ட நேரமாக இருக்கிறது.

Advertising
Advertising

விஜய்சேதுபதி

அண்மையில் அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி என மூன்று படங்களுமே தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. மிகவும் எதிர்பார்த்து படங்களை பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதி மீது அதிருப்தி அடைந்துவிட்டனர். எனவே அவர் விக்ரம், விடுதலை, மாமனிதன், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் தன் பங்கை சிறப்பாக செய்து வருகிறாராம்.

Published by
பிரஜன்