தமிழ் திரையுலகில் ஒரு முக்கிய பிரபலமாக இருப்பவர் நடிகர் விஜய். தன் படங்களின் மூலம் அதிக வசூலை பெற்றுத்தரும் மாபெரும் நடிகராக திகழ்ந்து வருகிறார் விஜய். எம்ஜிஆர், ரஜினி இவர்களுக்கு அடுத்தபடியாக வசூல் மன்னனாக சினிமாவில் கலக்கிக் கொண்டு வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு நடிகனாக தன் தந்தையின் இயக்கத்தில் ஒரு சில படங்களில் நடித்து அதன் பிறகு சினிமாவில் முக்கிய இயக்குனர்களின் படங்களின் பட்டியலில் ஒரு முதன்மையான நடிகராக இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களின் வாய்ப்புகள் விஜயை தேடி வந்தன.
ஆரம்ப காலங்களில் ஏராளமான விமர்சனங்களை சந்தித்த விஜய் அதன் பிறகு அவரின் வளர்ச்சியை கண்டு மெய்சிலிர்க்காதவர்களே இல்லை. இப்போது தன்னுடைய அடுத்த கட்ட முயற்சியான அரசியலிலும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார் விஜய்.

முதல் கட்டமாக தன்னுடைய மக்கள் இயக்கம் சார்பாக ஏராளமான நற்பணிகளை செய்து கொண்டு வருகிறார். இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் வாரிசு.
கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் இவருடைய மார்க்கெட் எந்த அளவிலும் குறையவில்லை.
அடுத்ததாக லியோ படத்தில் பிசியாக நடித்து வரும் விஜய் தன்னுடைய 68வது படத்தை வெங்கட் பிரபுவுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். இந்த நிலையில் விஜயின் சில ரகசியங்களை அவருடன் நடித்த ஒரு நடிகை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
வாரிசு படத்தில் விஜயின் நண்பர்களாக சதீஷ் மற்றும் சில பேரும் நடித்து இருப்பார்கள். அதில் ஒருவர் தான் நடிகை அர்ச்சனா உன்னிகிருஷ்ணன். இவருக்கு வாரிசு படம் தான் முதல் படம். அதுவும் விஜய்யுடன் நடித்த அனுபவத்தை பற்றி மிகவும் ஆச்சரியமாக அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

பத்து நாள் படப்பிடிப்பு இருக்க முதல் நாள் விஜய் பேசவே இல்லையாம். இரண்டாவது நாளிலிருந்து சகஜமாக பேச ஆரம்பித்தாராம். மேலும் அதிகமாகவும் பேச மாட்டார் என்றும் அர்ச்சனா கூறினார் .அது மட்டும் இல்லாமல் அவருடைய மகனைப் பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்தார் என்று அர்ச்சனா கூறினார்.
அதாவது அவருடைய மகனான சஞ்சீவ் இப்போது டைரக்ஷன் துறையில் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் அவரை ஒரு நடிகனாக பார்க்க வேண்டும் என்றுதான் விஜய் ஆசைப்பட்டாராம். ஆனால் நடிகராக சஞ்சய்க்கு விருப்பமே இல்லையாம். ஸ்கிரீனுக்கு பின் இருந்து கொண்டு பணியாற்ற வேண்டும் என்று தான் சஞ்சய் ஆசைப்படுகிறான் என்றும் விஜய் அந்த படப்பிடிப்பு சமயத்தில் கூறினாராம்.
