அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டெல்லாம் தள்ளி வைங்க.. தளபதியோட பிளானே இதுதானாம்!..

Thalapathy68: விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி68 படத்தில் நடித்து வருகிறார். அப்படம் முடிந்த கையோடு அடுத்து எந்த இயக்குனர் படத்தில் நடிப்பார் என பலரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த நேரத்தில் தற்போது அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய் நடிப்பில் லியோ படம் மிகப்பெரிய வசூலை செய்தாலும் படம் பலரிடத்திலும் விமர்சனங்களை பெற்றது. அப்படத்தினை தொடர்ந்து அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் டைம் ட்ராவல் படத்தில் நடித்து வருகிறார். இரட்டை கதாபாத்திரம் எனக் கூறப்படும் நிலையில் 90ஸ் விஜயை ஸ்க்ரீனில் காட்ட டீஏஜிங் விஎஃப்எக்ஸ் பணிகளை செய்துள்ளனர்.

இதையும் படிங்க: அதெல்லாம் விஜய்க்குத்தான் செட்டாகும்! அஜித்தை வைத்து புது முயற்சி எடுக்கப் போகும் ஆதிக் – பாக்க முடியுமா?

மேலும் இப்படத்தில் மைக் மோகன் வில்லனாக நடிக்க இருக்கிறார். 90ஸ் ஹிட் நாயகனான பிரசாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். படத்தினை தமிழ் நியூ இயர் இல்லை தீபாவளி தினத்தில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஒரு விழாவில் தான் விஜய் மற்றும் ஷாருக்கானுக்கு ஒரு கதையை எழுதி வருவதாக அட்லீ சொல்லி இருந்தார். இதனால் விஜயின் அடுத்த இயக்குனர் அட்லீ தான் என்ற தகவல் கசிந்தது. தற்போது விஜய் ரசிகர்களுக்கு ஒரு பெரிய வெடிக்குண்டே விழுந்து இருக்கிறது.

இதையும் படிங்க: முகத்தை திருப்பிக்கொண்ட பிரபல நடிகர்..! அவருக்கு நடிக்க சொல்லி கொடுத்து லைக் வாங்க வைத்த சிவாஜி..!

அதாவது விஜய் தளபதி68ஐ முடித்துவிட்டு நடிப்புக்கே இரண்டு வருடம் ப்ரேக் கொடுக்க போகிறாராம். அரசியல் எண்ட்ரியாக இருப்பதால் மாநாடு, கட்சி வளர்ச்சி ஆகியவற்றில் தன் கவனத்தை செலுத்துவதற்காக இந்த இடைவேளை அவருக்கு தேவைப்படுகிறதாம்.

இதனால் அடுத்து இரண்டு வருடம் கழித்து அடுத்தடுத்த கதை கேட்டு நடிக்கலாம். அதற்குள் விஜயின் அரசியல் அடித்தளம் சரியாக அமைந்துவிட்டால் மீண்டும் சினிமாவுக்கே திரும்பாமல் கூட போகலாம் என்ற ஒரு தகவலும் உலா வருகிறது.

 

Related Articles

Next Story