Categories: Cinema News latest news

எண்ட்ரிக்கு முன்னாடி இதை செய்ய திட்டமிடும் விஜய்!… அவர் கேரியரில் இதான் முதல்முறையாம்…

Vijay: நடிகர் விஜய் தன்னுடைய சினிமா கேரியரின் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் அரசியல் எண்ட்ரிக்கு திட்டமிட்டு இருக்கிறார். அதன் விவரங்கள் வரிசையாக வெளியாகி இருக்கும் நிலையில், தற்போது ஒரு புது ஐடியாவை திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கோட் படத்தினை முடித்த பின்னர் விஜய்  மொத்தமாக அரசியலுக்குள் வர இருக்கிறார். அதன் முதற்கட்டமாக சமீபத்தில் மக்கள் இயக்கத்தின் கூட்டம் நடந்தது. அதில் இயக்கத்தினை அரசியல் கட்சியாக மாற்ற தீர்மானம் நடைபெற்றுள்ளது. 

இதையும் படிங்க: என்னய்யா நடக்குது! இணையத்தை தெறிக்கவிடும் அஜித்.. விடாமுயற்சி அப்டேட்டை வாரி வழங்கிய மேனேஜர்

ஆனாலும் கோட் பட ரிலீஸ் வரை யாருமே வாயை திறக்க கூடாது என்றும் விஜயின் தரப்பில் இருந்து உத்தரவு  வந்து இருக்கிறதாம். தன்னுடைய நிர்வாகிகளிடம் எதுவும் சொல்லாமல் வெள்ளை பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதும் சமீபத்தில் பரபரப்பானது. இதை தொடர்ந்து அவரின் கட்சி பெயர் மற்ற அறிவிப்புகளுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து நடிப்பில் இரண்டு வருடம் விஜய் பிரேக் எடுப்பார் என தகவல்கள் கசிந்தது. ஆனாலும் அவரின் அடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் என்ற விஷயம் இணையத்தில் உலா வந்தது. அதனை தொடர்ந்து அரசியலுக்கு வந்தாலும் நடிப்பை தொடருவார் என்றும் சிலர் தற்போது கூறிவருகின்றனர்.

இதையும் படிங்க: லீகலா 2 கல்யாணம்!. இல்லீகலா எத்தனை வேணா பண்ணுவேன்!.. 3வது கல்யாணம் பற்றி பேசும் வனிதா…

Published by
Akhilan