அக்கட தேசத்தில் கெத்து காட்டிய விஜய்...! மேடையில் தெலுங்கு நடிகர்களை வெளுத்து வாங்கிய வாரிசு பட தயாரிப்பாளர்...
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் வாரிசு. இந்த படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் விஜயுடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார் போன்ற பல நடிகர்களும் இணைந்து நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் விஜய் சென்னை ஐதராபாத்திற்கு விமானத்தில் பயணித்து வருகின்றார். இந்த நிலையில் தெலுங்கு பட சேம்பர்ஸ் எல்லாம் சேர்ந்து சமீபத்தில் ஒரு கூட்டத்தை கூட்டியதாம்.
இதையும் படிங்கள் : ஒரே ஒரு நகைச்சுவையால் கமலின் அகங்காரத்தை அடக்கிய நடிகர் நாகேஷ்…சூப்பர் ஹிட் காமெடி சீன்…
அந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்களுக்கான எக்ஸ்ட்ரா செலவுகளை குறைக்கும் விதத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டதாம். மேலும் ஆந்திராவில் தெலுங்கு நடிகர்கள் பெரும்பாலும் வெளியூர் படப்பிடிப்பிற்கு தனிவிமானம் தான் வேண்டும் என கேட்கிறார்களாம். இதை பொறுத்துக் கொள்ள முடியாத வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கு நடிகர்களை சரமாரியாக திட்டினாராம்.
இதையும் படிங்கள் :வளவள உடம்பு சும்மா வாளிப்பா இருக்கு!…வளச்சி வளச்சி காட்டும் இளம் நடிகை…
வாரிசு படத்திற்காக நடிகர் விஜய் சென்னையிலிருந்து இங்கு வருவதற்கு இண்டிகோ, ஏர் இந்தியா போன்ற பயணிகள் விமானத்தை தான் பயன்படுத்துகிறார். தனி விமானம் வேண்டும் என அவர் இது வரை கேட்டதில்லை. எப்பேற்பட்ட நடிகர். அவரே கேட்பதில்லை. உங்களுக்கு என்ன? என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.