விஜய், சிம்பு விஷயத்தில் நான் சொன்னது தான் நடந்தது..! விழா மேடையில் கெத்தா கூறிய கிருத்திகா உதயநிதி...
சினிமாவை பொறுத்தவரை நடிகர், நடிகைகள் எல்லாருமே அவர்களின் சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு நல்ல நிலைமையை அடைந்தவர்கள் தான். சில பேர் தங்களின் அப்பா, தாத்தா இவர்களை பின்பற்றி நடிகர்களாக சினிமாவிற்குள் நுழைகின்றனர்.
உதாரணமாக விஜய், சிம்பு, விக்ரம் பிரபு, அதர்வா, போன்றோர் தங்கள் அப்பா மூலம் சினிமாவில் வந்து அதன் பின்
தங்களின் சொந்த முயற்சியால் பெரும் உச்சத்தை அடைகிறார்கள். இந்த வகையில் விஜய் , சிம்பு இவர்கள் அப்பவே பெரிய இடத்திற்கு வருவார்கள் என்று நான் சொன்னேன். அதே போல் பெரிய நிலையை அடைந்துள்ளார்கள் என நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதியின் மனைவியும் இயக்குனருமான கிருத்திகா உதயநிதி கூறியுள்ளார்.
சிம்பு ஹீரோவாக நடித்த முதல் படமான சொன்னால் தான் காதலா படத்தில் நடிக்கும் போதே என் தோழிகளிடம் சிம்பு ஒரு பெரிய இடத்தை பிடிப்பார் என சொன்னேன். அதே போல் யாரும் எட்ட முடியாத நிலையை அடைந்து விட்டார். அதே போல் விஜயையும் அவரின் படத்தை பார்த்து சொன்னேன்.
அவரும் இன்றைக்கு தமிழ் திரையுலகமே கொண்டாடும் வகையில் பாராட்டப்படுகிறார் என்றும் தான் தயாரித்த வெப் சீரிஸ் படமான பேப்பர் ராக்கெட் படத்தின் புரோமோஷன் விழாவின் போது கூறி பெருமைப்பட்டுக் கொண்டார்.