More
Categories: Cinema News latest news

ஜெயிலர் வசூலுக்கு முதல் ஆளாக வாழ்த்திய விஜய்!.. காக்கா – கழுகு கதைக்கும் முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்!..

இந்த ஆண்டு ஜனவரி மாதம் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பற்றிய நெருப்பு ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் மேலும் கொழுந்து விட்டு எரிந்த நிலையில், ஜெயிலர் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டுகள் வெளியான நிலையில், மேலும் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் பெரிய பஞ்சாயத்தையே கிளப்பி உள்ளது.

ஆனால், இவை அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குநர் நெல்சன் அளித்த லேட்டஸ்ட் பேட்டி விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களின் சண்டைக்கு எண்ட் கார்டு போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் படம் ஆரம்பித்தது முதல் படத்தின் வசூல் வரை நடிகர் விஜய் எந்தளவுக்கு இந்தப் படத்தின் மீது ஆர்வமாக இருந்தார் என்றும் ரஜினி சார் மீது அவர் வைத்திருக்கும் அன்பு மற்றும் அவர் மீது ரஜினி சார் வைத்துள்ள அன்பு குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார் இயக்குநர் நெல்சன்.

Advertising
Advertising

இதையும் படிங்க: சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுத்த விஜய்!.. ஒரேயொரு படம் தான்!.. விஜய்யோட டோட்டல் பாக்ஸ் ஆபிஸும் காலி!..

நெல்சனுக்கு நிம்மதி: 

விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் குவிந்த நிலையில், மன உளைச்சலுக்கு அதிகளவில் ஆளான இயக்குநர் நெல்சன் ஜெயிலர் படத்தை ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடுவதையும் அந்த படத்தின் வசூல் மற்றும் அட்வான்ஸ் புக்கிங் நிலவரத்தை அறிந்த நிலையில், நிம்மதி பெருமூச்சு விட்டு மீடியாக்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

ஜெயிலர் வசூலுக்கு விஜய் வாழ்த்து:

ஜெயிலர் படத்தின் அமெரிக்கா மற்றும் ஓவர் சீஸ் வசூல் ரிப்போர்ட்டுகள் பற்றி தெரிந்ததுமே வாழ்த்துக்கள் நெல்சன் என முதல் ஆளாக மெசேஜ் போட்டதே விஜய் சார் தான் என்கிற ரகசியத்தை அம்பலப்படுத்திய இயக்குநர் நெல்சன் சென்னைக்கு விரைவில் வந்துவிடுவார், இன்னைக்கு போன் பண்ணி கூப்பிடுவாருன்னு நினைக்கிறேன். படம் பார்த்திருப்பார் என அந்த பேட்டியில் நெல்சன் பேசியது விஜய் ரசிகர்களையும் ரஜினி ரசிகர்களையும் நிச்சயம் ஆசுவாசப்படுத்தி இருக்கும்.

இதையும் படிங்க: 10 பெண்கள்!.. பலான விஷயத்தில் சிக்கிய ஜெயிலர் வில்லன்!.. யார் இந்த விநாயகன்?..

காக்கா – கழுகு சண்டைக்கு முற்றுப்புள்ளி: 

நடிகர் ரஜினிகாந்த், விஜய்க்காகத் தான் காக்கா – கழுகு சொன்னாரா என்றே பேட்டி எடுப்பவர் வெளிப்படையாக கேட்ட நிலையில், அப்படி எப்படி சார் சொல்லுவார், அவர் எவ்ளோ ஸ்வீட்டான நபர் தெரியுமா? எப்படி பேசினாலும், அதை எப்படி கோர்த்து சர்ச்சையை கிளப்புவது என நினைப்பவர்கள் பண்ண வேலை தான் அதெல்லாம்.

மற்றபடி ரஜினி சார் 50 வருஷமா இண்டஸ்ட்ரியில இருக்காரு, விஜய் சார் 30 வருஷமா இண்டஸ்ட்ரியில இருக்காரு, அவங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கும், பல விஷயங்களை பார்த்துட்டு வந்திருப்பாங்க, சக நடிகரை எல்லாம் டார்கெட் பண்ணி பேச வேண்டும் என்றும் சினிமாவில் யாருமே நினைக்க மாட்டாங்க, சினிமா நடிகர்களை விமர்சிப்பவர்கள் அந்த மேடையில் ரஜினி எதை பேசினாலும், அவருக்கு எதிராக திருப்பக் கூடியவர்கள் தான் என நெல்சன் ரஜினி நடிகர் விஜய்க்காக அந்த கதையை சொல்லவில்லை என வெளிப்படையாகக் கூறி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

இதையும் படிங்க: இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா?.. சூப்பர்ஸ்டார்னா சும்மாவா!.. வசூல் வேட்டையில் ஜெயிலர்!..

Published by
Saranya M

Recent Posts