விஜய்கிட்ட அவர் பையனயே பேச விடமாட்றாங்க!.. பத்திரிக்கையாளர் சொன்ன பகீர் தகவல்!..
விஜயின் அரசியல் வேகம் ஒரு பக்கம் விறு விறுவென சென்றாலும் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்பதை வெளிப்படையாக இன்னும் அவர் உறுதிப்படுத்தவில்லை என்பதே பல பேரின் ஆதங்கமாக இருக்கிறது. இதைப் பற்றி பிரபல பத்திரிக்கையாளரான கோடாங்கி ஒரு பேட்டியின் மூலம் அவருடைய கருத்துக்களை மிக வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
விஜய்க்கு அரசியல் பற்றிய ஆலோசனை வழங்கும் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் என்பவர் இருக்கிறாராம். ஒரு பிரபலம் உடனே அரசியலுக்குள் வந்து விட்டால் அவரை அழிப்பதற்கான சக்திகள் தன்னுடைய வேலையை ஆரம்பிக்கும். இதுவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு உள்ளே வருவது தான் சூட்சமம். அப்போதான் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்துக் கொண்டிருப்பார்கள்.
இதுவே உடனே அரசியலுக்கு வந்து விட்டால் "தலைவர் வந்துட்டாருப்பா, அவ்வளவுதான்பா" என நினைத்துக் கொண்டு போகிறவர்கள் ஒரு பக்கம். இன்னும் சில பேர் அவரை எப்படி அழிக்கலாம் என நினைத்து அந்த வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். விஜயின் இந்த அரசியல் செயல்பாடுகளால் இன்னும் மூன்று வருடத்திற்கு அவர் நடிக்க மாட்டார் என பரபரப்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.
ஆனால் இது உண்மையா என அவருடன் கூடவே இருக்கும் புஷி ஆனந்திடம் கேட்டால் "இதை நாங்கள் சொன்னோம்மா? அவர் நடிக்க மாட்டார் என்று எங்கள் வாயிலிருந்து வந்ததா "என கேட்கிறார். இதுதான் அரசியல். மேலும் அவருடைய ரசிகர்களை அழைத்து மீட்டிங் எல்லாம் போடுகிறார். ஆனால் இது அரசியல் சார்ந்த கூட்டம் என்று என்றைக்காவது விஜய் சொல்லி இருக்கிறாரா ?ஆனால் அது சம்பந்தமான வேலைகள் தான் உள்ளே நடந்து கொண்டிருக்கின்றன.
அதாவது போருக்கு வீரர்களை எப்படி தயார் படுத்துவார்களோ அதே போல விஜய் தன்னுடைய ரசிகர்களை நிர்வாகிகளாக இப்பொழுதிலிருந்தே செதுக்கி கொண்டிருக்கிறார். அதற்கான வேலைகள் தான் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் புஸ்ஸி ஆனந்த் அரசியல் பற்றி விஜயிடம் யாரையும் பேச அனுமதிப்பதில்லை என்றும் ஏன் அவர் குடும்ப உறுப்பினர்களிடம் கூட விஜய் அரசியல் பற்றி எதையும் வாய் திறப்பதில்லை என்றும் அந்த அளவுக்கு அழுத்தத்தில் இருக்கிறார் என்றும் கோடங்கி கூறினார்.
மேலும் விஜயின் மகன் சஞ்சய் கூட விஜயிடம் ‘அரசியல் நிலைப்பாடுகளை பற்றி எதுவும் கேட்கமுடிவதில்லை, புஸ்ஸி ஆனந்த் விஜயை தன் வட்டத்திற்கு வைத்திருக்கிறார்’ என்றும் கூறினார். விஜயை நெருங்க வேண்டுமென்றால் விஜயை விட புஸ்ஸி ஆனந்திற்கு நிறைய ஃபாலோயர்ஸ்கள் இருந்தால் போதும். அவர் சொன்னால் தான் விஜய் கேட்கிறார் என்றும் கோடங்கி கூறினார்.