அஜித் படத்தின் 2ம் பாகத்தில் விஜய் மகன்?.. இயக்குனர் எடுக்கும் முயற்சி பலிக்குமா?....
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக பிரபல நடிகையின் மகள் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் காட்டுத்தீ போல வேகமாக பரவி வருகிறது.
நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்க்கு சினிமா ஆர்வம் உள்ளது. இயக்குனராக வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும் அவருக்கு ஹீரோவாக நடிக்க பல வாய்ப்புகள் தேடி வருகிறது என்று நடிகர் விஜய் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
நடிகை தேவயானியின் மகள் இனியாவுக்கு ஜோடியா நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை தேவயானி இயக்குநர் ராஜகுமாரன் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் கல்லூரியில் படித்து வரும் இனியா என்ற பெண்ணை சினிமாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அவரது தந்தை கூறியுள்ளார். இவரது புகைப்படம் கூட சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இதையும் படிங்க: விஜயுடன் ஷங்கர் இணைவது உண்மையா?!. இருக்கு ஆனா இல்ல!.. விஷயம் இதுதான்!..
இந்நிலையில் இயக்குநர் ராஜகுமாரன் நீ வருவாய் என படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாகவும், அதற்கான பணிகள் தீவிரமாக நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது. எனவே அவர் இயக்கவிருக்கும் அந்த படத்தில் தனது மகள் இனியாவை ஹீரோயினாகவும், நடிகர் விஜயின் மகன் சஞ்சயை ஹீரோவாகவும் நடிக்கவைக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்காக இயக்குநர் ராஜகுமாரன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆபீஸ் பாய் கேட்ட கேள்வி!.. ஆடிப்போன டி.ராஜேந்தர்… முதல் பட ரிலீஸில் வந்த பயம்..