விஜய்யின் மகன் டைரக்ட் செய்யப்போற ஹீரோ இவர்தான்… சீக்ரெட்டை பகிர்ந்த எஸ்.ஏ.சி…
விஜய்யின் மகனான சஞ்சய் “வேட்டைக்காரன்” திரைப்படத்தில் “நான் அடிச்சா தாங்கமாட்ட” என்ற பாடலில் நடனமாடியிருந்தார். அதனை தொடர்ந்து சஞ்சய், பல திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சஞ்சய் அதன் பின் திரையில் தோன்றவில்லை.
சஞ்சய் தற்போது சினிமா சம்பந்தமாக பல தொழில்நுட்பம் சார்ந்த கல்விகளை வெளிநாடுகளில் பயின்று வருகிறார். இதனிடையே சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கவுள்ளார் என்று பல செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது பேரனான சஞ்சய்யை குறித்து ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
அதாவது கனடாவில் படித்துக்கொண்டிருந்த சஞ்சய் வீட்டிற்கு ஒரு முறை திரும்பியபோது அவரிடம் “உனக்கு என்னாடா, நீ டைரக்ட் பண்ணனும்ன்னு நினைக்கும்போது உனக்கு ஒரு சூப்பர் ஸ்டார் இருக்குறாரு. நீ ஈஸியா டைரக்டர் ஆகிடலாம்” என கூறினாராம்.
விஜய்யை வைத்து படம் எடுத்தால் நிச்சயமாக படம் ஓடிவிடும், அதுதான் இன்றைய நிலைமை என்ற எண்ணத்தில் அப்படி கூறினாராம். அதற்கு சஞ்சய் “இல்லை தாத்தா, நான் விஜய் சேதுபதியை வைத்துத்தான் முதலில் படம் இயக்குவேன்” என கூறினாராம்.
இதையும் படிங்க: நான் சூப்பர்ஸ்டார்… ஆனால் என்னால இதெல்லாம் பண்ணவே முடியாது… வருத்தப்பட்ட ரஜினி…
அதே போல் முதலில் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கிய பின் சிறந்த இயக்குனராக வளர்ந்த பிறகுதான் விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற குறிக்கோளில் இருக்கிறாராம் சஞ்சய்.