குறைக்கப்பட்ட வலிமை நீளம்... அன்றே கணித்த விஜய் என்ற டயலாக்குடன் வைரலாகும் வீடியோ....!

by ராம் சுதன் |
vijay-ajith
X

அஜித் மற்றும் இயக்குனர் வினோத் கூட்டணியில் சமீபத்தில் வெளியான வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. ஆனால் படத்தின் நீளம் தான் சற்று அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடும் வலிமை படத்தில் இருந்து 14 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வலிமை ஹிந்தி வெர்ஷனில் 15 நிமிட காட்சியை நீக்க உள்ளதாகவும், நாங்க வேற மாதிரி பாடல் காட்சியும் நீக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் திடீரென தளபதி விஜய் பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் டிரண்டாகி வருகிறது. முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தின் 100வது நாள் வெற்றி விழாவில் விஜய் பேசிய வீடியோவை தான் தற்போது ரசிகர்கள் டிரண்டாக்கி வருகிறார்கள்.

ஏனெனில் வலிமை படத்தின் காட்சிகள் குறைப்புக்கு விஜய்யின் அந்த வீடியோ பேச்சு தான் காரணம் என கூறப்படுகிறது. அப்படி விஜய் அந்த வீடியோவில் என்ன கூறியுள்ளார் தெரியுமா? அவர் கூறியிருப்பதாவது, "படத்தை இரண்டரை மணி நேரத்திற்குள் சொல்லி முடித்து விடுங்கள். ஏனென்றால், இப்போதெல்லாம் நல்ல படமாக இருந்தாலும் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் சென்றால் நேரமாகிறது என எல்லோரும் வாட்ச்சை பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

ரொம்ப நேரம் படமெடுத்தால் பாம்பு கூட கீரியிடம் தோற்றுப் போகும். அதனால் அதை மனதில் வைத்துக்கொண்டு இனி படங்களை எடுங்கள்" என விஜய் பேசியுள்ளார். இந்நிலையில் விஜய் கூறியதை மனதில் வைத்து தான் தற்போது வலிமை படத்தின் காட்சிகளை குறைத்துள்ளார்கள் என விஜய் ரசிகர்கள் அந்த வீடியோவை டிரண்டாக்கி வருகிறார்கள்.

Next Story