இது தான் உண்மையான பீஸ்ட் மூடு.! கொண்டாட்டத்தின் உச்சியில் தளபதி ரசிகர்கள்.!

by Manikandan |
இது தான் உண்மையான பீஸ்ட் மூடு.! கொண்டாட்டத்தின் உச்சியில் தளபதி ரசிகர்கள்.!
X

தளபதி விஜய் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி என பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர்.

beast

இப்படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்து, ரிலீசுக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படத்தை ஏப்ரல் 14இல் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது. இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்த படத்தில் இருந்து 2 போஸ்டர்கள் மட்டுமே வெளியாகி இருந்தன. புத்தாண்டு தினத்தில் பாடல் வரும். அல்லது வேறு அப்டேட் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதையும் படியுங்களேன்- ஒரே போட்டோ உலகம் முழுக்க ஃபேமஸ்.! கண்ணீர் விட்டு அழுத ஷாருக்.!

beast

தற்போது ரசிகர்களுக்கு சன் பிக்ச்சர்ஸ் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள்ளது. இன்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் முக்கிய அப்டேட் வரும் என தற்போது அப்டேட்க்கு அப்டேட் விட்டு சன் பிச்சர்ஸ் தெறிக்க விட்டுள்ளது.

இன்று மாலை என்ன அப்டேட் வர போகிறதோ என ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சியில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Next Story