More
Read more!
Categories: Cinema News latest news

அப்பவே இதை செய்த அஜித்!.. இப்போதான் விஜய்க்கு ஞானம் பொறந்திருக்கா?.. இனிமே வெளியவே வரமாட்டாரா?..

நடிகரை நடிகராக பார்க்க வேண்டும் என்றும் தன்னால் தனது ரசிகர்கள் பாதிக்கக் கூடாது என்றும் நடிகர் அஜித் எப்பவோ முடிவு செய்து ரசிகர்கள் மன்றத்தை கலைத்தார். பொது நிகழ்ச்சிகளில், புரமோஷன்களில் பங்குபெறுவதை தவிர்த்து வருகிறார்.

தல என்கிற பட்டத்தையும் தூக்கி எறிந்தார். ஆனால், நடிகர் விஜய் இத்தனை ஆண்டுகளாக எந்தவொரு சிக்கலும் இன்றி இளைய தளபதியில் இருந்து அப்கிரேடு ஆகி தளபதியாக மாறி அனைத்தையும் கச்சிதமாக செய்து வந்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: கோட்டை விட்ட இறைவன்!.. தட்டித் தூக்கிய வேட்டையன்!.. சந்திரமுகி 2 முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?..

சமீபத்தில், அத்தனை ஆயிரம் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா, அதற்கு முன்னதாக வாரிசு இசை வெளியீட்டு விழா என பலவற்றையும் நடத்தி மாஸ் காட்டினார். ஆனால், இந்த முறை லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ரத்து செய்ய என்ன காரணம்? என ஏகப்பட்ட குட்டி ஸ்டோரிகள் சமூக வலைதளங்களி வலம் வருகின்றன.

விஜய்யின் மனைவி மற்றும் மகன் வரமாட்டேன் எனக் கூறி விட்டதாக ஒரு கதை, லோகேஷ் கனகராஜுக்கும் விஜய்க்கும் இடையே முட்டிக் கொண்டது என இன்னொரு கதை என பலவிதமான பஞ்சாயத்துக்கள் கிளம்பி உள்ளன.

இதையும் படிங்க: என்ன இருந்தாலும் இப்படி நடந்திருக்கக் கூடாது! சிவாஜியை காப்பாற்றப் போய் மாட்டிக் கொண்ட சில்க்!

அனைத்தையும் விட அதிகாரப்பூர்வமாக சொன்ன காரணம் தனது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் தனது நிகழ்ச்சியால் பாதிக்கக் கூடாது என்பது தான். இதைத்தான் நடிகர் அஜித் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே செய்து இருந்தார் என்றும், நடிகர் விஜய்க்கு இப்போது தான் ஞானோதயம் பிறந்திருக்கிறதா? என விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

மேலும், இனிமேல் நடிகர் விஜய் தளபதி 68 உள்ளிட்ட எந்தவொரு படத்துக்கும் இசை வெளியீட்டு விழாவை நடத்த மாட்டார் என்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல் அஜித் வழியை பின்பற்றப்போகிறாரா? என்கிற கேள்விகளையும் திரையுலகினரே எழுப்பி வருகின்றனர்.

Published by
Saranya M

Recent Posts

  • Entertainment News
  • latest news
  • television

பிக்பாஸ் அர்ச்சனாவின் காதலர் இவர்தானா?… புகைப்படம் உள்ளே!

பிக்பாஸ் டைட்டிலை…

7 hours ago