Categories: Cinema News latest news

உலகமே கொண்டாடிய சம்பவம்! மௌனம் காத்த விஜய் – அதுக்கு இவர் சரிப்பட்டு வருவாரா?…

தமிழ் சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். கோலிவுட்டில் பெரும் வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவுடன் தன்னுடைய 68 வது படத்தில் இணைய இருக்கிறார்.

விஜயின் ஒவ்வொரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. கோலிவுட்டிலேயே அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக விஜய் திகழ்ந்து வருகிறார். இதை வைத்தே தன்னுடைய அடுத்த அவதாரத்தை எடுத்திருக்கிறார் விஜய்.

இதையும் படிங்க : அட்லீக்கும் ஷாருக்கானுக்கும் முதல் ஆப்பு ரெடி!.. லியோ டிக்கெட் புக்கிங் எப்போ ஆரம்பம் தெரியுமா?..

ஆம். அரசியல் பக்கமும் அவரின் ஆர்வம் திரும்பியிருக்கிறது. அதன் முன்னெடுப்பாகத்தான் தன் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் விஜய். அவ்வப்போது மக்கள் இயக்கம் சார்பாக கூட்டங்களையும் நடத்தி தேர்தலுக்கான விதிமுறைகள் பற்றியும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

தன்னுடைய தளபதி 68 படத்தை பிறகு விஜய் ஒரு மூன்று வருடம் சினிமாவிற்கு பிரேக் கொடுத்து அரசியலில் தீவிரம் காட்டப்போவதாகவும் சில தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் டூரிங் டாக்கிஸ் நிகழ்ச்சியில்  ‘அரசியலில் ஆர்வம் இருக்கும் விஜய் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சந்திராயன் 3 பற்றி மௌனமாக இருப்பது ஏன்? உண்மையிலேயே விஜய்க்கு இந்தியாவின் மீது அன்பு இருக்கா?’ எனக் கேட்டிருந்தார்.

இதையும் படிங்க : என்ன பெரிய நோலன் படம்!.. மாதவன் படம் பார்த்துருக்கீங்களா?.. ஹாலிவுட்டை அலற விட்ட ஏ.ஆர். ரஹ்மான்!..

அதற்கு சித்ரா லட்சுமணன் ‘ ஒரு நடிகரை பற்றி விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் பற்றி ஆராய்வது என்பது நல்லது அல்ல. சந்திராயன் 3 பற்றி பேசாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு இந்தியா மீது அக்கறை இல்லையா என்ன?  ’ என பதில் கூறினார்.

Published by
Rohini