
Cinema News
ஐடி விங்கை பலப்படுத்தும் விஜய்.. ஜவான் ஆடியோ லாஞ்சில் கண்டிப்பா சர்ப்ரைஸ் இருக்கு!..
நடிகர் விஜய் வெளிநாட்டில் தளபதி 68 படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தாலும், சென்னையில் இன்று நடைபெற்ற விஜய் மக்கள் இயக்க ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை ஒட்டுமொத்த கன்ட்ரோலில் புஸ்ஸி ஆனந்தை வைத்தே நடத்தி முடித்துள்ளார். அதன் பின்னணியில் பெரிய பிளானே உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லியோ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் பிசினஸை ஒரு பக்கம் அதிகரிக்கவும் பாலிவுட்டில் லியோ பிசினஸை அதிகரிக்கவும் ஷாருக்கான் ரசிகர்களை கவரும் விதத்தில் ஜவான் படத்தில் விஜய் கேமியோ பண்ணியிருக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பரவலான பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
இதையும் படிங்க: அட்லீக்கும் ஷாருக்கானுக்கும் முதல் ஆப்பு ரெடி!.. லியோ டிக்கெட் புக்கிங் எப்போ ஆரம்பம் தெரியுமா?..
ஜவான் இசை வெளியீட்டு விழாவில் விஜய்:
ஒருவேளை ஜவான் படத்தில் விஜய் கேமியோவாக வரவில்லை என்றாலும் கூட விரைவில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் நிச்சயம் பங்கேற்பார் என செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
ஷாருக்கானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதிலும், பாலிவுட்டில் சொல்லவே வேண்டாம். ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முறியடிக்க கேஜிஎஃப் 2 படத்தை போல இந்தி பெல்ட்டிலும் வசூல் வேட்டை நடத்தினால் தான் உண்டு.
இதையும் படிங்க: என்ன பெரிய நோலன் படம்!.. மாதவன் படம் பார்த்துருக்கீங்களா?.. ஹாலிவுட்டை அலற விட்ட ஏ.ஆர். ரஹ்மான்!..
விஜய்யின் மாஸ்டர் பிளான்:
அதற்காக இந்தி ரசிகர்களை பிடிக்க ஜவான் ஆடியோ வெளியீட்டு விழாவில் நிச்சயம் நடிகர் விஜய் பங்கேற்பார் என்றும் ஷாருக்கான், விஜய்சேதுபதி, நயன்தாரா, பிரியாமணியை தாண்டி அட்லீயை தம்பி போல விஜய் பார்த்து வருவதால், கண்டிப்பாக பங்கேற்பார் எனக் கூறியுள்ளார்.
விஜய் மக்கள் இயக்கம் எல்லா விதத்திலும் ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக மாற்றும் முயற்சியிலும் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். ஐடி விங் ஆலோசனை கூட்டம் மூலமாக ஐடி விங்கை பலப்படுத்த முடிவு செய்துள்ள விஜய் தளபதி 68 படத்திற்கு பிறகு கண்டிப்பாக அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் செய்யாறு பாலு வெளிப்படையாக பேசியுள்ளார்.