திடீரென ரிலையன்ஸிடம் சரணடைந்த விஜய்! திணற வைக்கும் தளபதியின் அல்ட்ரா மைண்ட்!

by Rohini |
vijay
X

vijay

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய். இளைய தளபதி என்பதிலிருந்து இப்போது தளபதியாக அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் விஜயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் மிகவும் பிரமிப்பாகவே பார்த்து வருகிறார்கள். அவரின் வளர்ச்சி ஒரு எட்ட முடியாத வளர்ச்சியாக அனைவருமே மெய் சிலிர்க்கிறார்கள்.

ஒரு நடிகராக அனைவருக்கும் தெரிந்த விஜயை ஒரு தொழிலதிபராகவும் இப்போது அனைவரும் அறிய ஆரம்பித்து விட்டனர். அவருக்கு ஏற்கனவே நிறைய திருமண மண்டபங்கள் இருக்கின்றன. அதை தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் பெயரால் நிர்வகித்து வருகிறார். தன்னுடைய தாயார் ஷோபா மகன் சஞ்சய் மனைவி சங்கீதா ஆகியோரின் பெயர்களில் பல திருமண மண்டபங்கள் இயங்கி வருகின்றன.

vijay1

vijay1

சென்னை மட்டுமில்லாமல் புதுக்கோட்டை போன்ற பல மாவட்டங்களிலும் திருமண மண்டபங்களை நடத்தி வருகிறார். சினிமாவைப் பொறுத்த வரைக்கும் ஒரு நடிகர் உச்சநிலையை அடைந்து அவர் அரசியலிலும் கால் பதிக்கிறார் என்றால் தானாகவே பல பிரச்சினைகள் அவரைத் தேடி வரும் .அதே போல தான் விஜய்க்கும் .அவருடைய இந்த திருமண மண்டபங்கள் முறையான பத்திரப்பதிவுகளை கொண்டிருக்கிறதா, மாநகராட்சிகள் வருமான வரி கட்டப்பட்டுள்ளதா, வேறென்ன வில்லங்கங்கள் உள்ளன என்று இதற்கு முந்தைய அரசு விஜய்க்கு குடைச்சல் கொடுத்தார்கள்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தை தயாரிப்பாளர் லலித்திடம் மாத வாடகை எட்டு லட்சத்திற்கு 15 வருஷம் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கொடுத்திருக்கிறாராம் விஜய். ஆனால் இப்பொழுது இந்த திருமண மண்டபத்தை ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு 12 லட்சம் மாத வாடகைக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

vijay2

vijay2

மேலும் போரூரில் இருக்கும் சங்கீதா திருமண மண்டபமும் தற்போது ரிலையன்ஸ் டிரண்ட்ஸ் ஆக மாறி வருகிறதாம். இதை வைத்து தான் இப்போது எதற்கு ரிலையன்ஸ் இடம் திடீரென்று விஜய் ஒப்பந்தத்தில் ஈடுபடுகிறார் என்று அனைவரையும் சந்தேகிக்க வைக்கிறது. ஒருவேளை அரசியல் வேலையை வேகமாக தொடங்குவதற்காக இருக்குமா என ரசிகர்கள் தங்களுக்குள்ளாகவே இணைய வழி மூலமாக பேசி வருகின்றனர்.

இதையும் படிங்க : ஒழுங்கா பெட்டிக் கடை வச்சி பிழைச்சுக்கோ- ஜெய் பீம் மணிகண்டனை மிரட்டிய துணை நடிகர்?

Next Story