பூதாகரமாக வெடிக்கும் விஜய் சூப்பர் ஸ்டார் சர்ச்சை பேச்சு!.. ரஜினியை மறைமுகமாக தாக்கினாரா சீமான்?..
தமிழ் சினிமாவில் இப்போது ரசிகர்கள் தங்கள் கடவுளாக கொண்டாடும் நடிகர் தளபதி விஜய். இவர் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. ரஜினியை எப்படி தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தார்களோ அதே அளவுக்கு விஜயையும் வரவேற்க தயாராக இருக்கிறார்கள்.
அதற்கு ஏற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் விஜய் ரசிகர்களுக்காக ஏதோ ஒரு வகையில் திட்டங்களை வகுத்து உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : பா.ரஞ்சித்தால் ஹெச்.வினோத்துக்கு வந்த சிக்கல்… சைக்கிள் கேப்ல பெரிய நடிகரின் வாய்ப்பை கவ்விட்டு போயிட்டாரே!!
மேலும் அவர் நடித்து வெளியான வாரிசு படத்தில் ஆரம்பித்த இந்த சர்ச்சை இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. விஜயை சூப்பர் ஸ்டார் என்று சொல்வதை பிரபலங்கள் பலரும் எதிர்த்து வருகின்றனர். 40 ஆண்டுகளாக கடின உழைப்பாலும் நடிகர் சங்கத்திற்கு தேவையான உதவிகளை செய்து வந்ததாலும் இந்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறார் ரஜினி.
அவரின் பட்டத்தை ஈஸியாக பெற்று விட முடியுமா? என்று கூறிவருகின்றனர். ஆனால் விஜய்க்கு ஆதரவாக வெளிப்படையாக தன் கருத்தை தெரிவித்து வருகிறார் சீமான். மேலும் அவர் கூறும் போது சூப்பர் ஸ்டார் என்பது ஒரு பட்டமே தவிர பட்டயம் கிடையாது. மேலும் தமிழ் சினிமாவில் விஜய் நன்றாக உயர்ந்து நிற்கிறார். அவருக்கு கொடுப்பது பற்றி தவறே இல்லை.
அந்தந்தக் காலத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் வருகிறார்கள், அதுஎதார்த்தம், இந்த தலைமுறையில் விஜய். அதற்கும் மேலாக ஒரு தமிழனுக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை கொடுப்பதில் என்ன தவறு? இதை பற்றி ரஜினியும் ஒன்றும் சொல்லமாட்டார். அவரும் ஒத்துக் கொண்டார் உங்களுக்கு என்னபிரச்சினை ? என்று கூறிவருகிறார் சீமான்.
இதற்கிடையில் ரஜினியை மறைமுகமாக விமர்சித்திருப்பதாக தெரிகிறது. இவர் கூறியதில் இருந்து இவ்ளோ நாள் ஒரு தமிழ் நாட்டை சாராத ஒரு நபர் சூப்பர் ஸ்டார் பட்டத்தை ஆண்டு வந்தார், இப்போது ஒரு தமிழனுக்கு கொடுத்தால் என்ன? என்ற தோணியில் பேசியதாக தெரிகிறது.