எனக்காக ஒரு பாட்டு பாடுங்க! வைரலாகும் வீடியோ.. அன்னையர் தினத்தில் ஷோபாவை சர்ப்ரைஸ் செய்த விஜய்
Actor Vijay: இன்று தகவல் தொழில்நுட்பம் அபார வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நேரத்தில் எல்லா துறைகளிலும் அதனுடைய தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக சினிமாவில் வித்தியாசமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான வெளியீட்டை தயாரிப்பாளர்கள் பெற்றுக் கொள்கின்றனர். அந்த வகையில் ஏஐ என்று சொல்லப்படும் அட்வான்ஸ் தொழில்நுட்பம் இன்று சினிமாவிலும் பயன்படுத்தப்பட்டு விட்டது.
ஏ ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கோட் திரைப்படத்தில் விஜயகாந்த் வரும் மாதிரியான காட்சிகளை படமாக்கி இருக்கின்றனர். இது போல் இல்லாதவர்களை இந்த தொழில்நுட்பம் மூலம் மறுபடியும் கொண்டுவர முடியும். அந்த வகையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜய் தன் அம்மா ஷோபாவிற்கு அன்னையர் தின வாழ்த்து சொல்லுவது மாதிரி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: மனோஜை லாக் செய்த முத்து… ரோகிணி உங்களுக்கு வாய் கொஞ்சம் அதிகம் தான்…
ஒரு விழாவில் கலந்துகொண்ட ஷோபாவிற்கு சர்ப்ரைஸ் ஆக அந்த விழா நிர்வாகம் ஏ ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி விஜயின் வீடியோவை வெளியிட்டது. அன்று அன்னையர் தினம் என்பதால் விஜய் தன் அம்மாவிடம் அன்னையர் தின வாழ்த்துக்களை சொன்னதோடு அம்மா எனக்காக ஒரு பாட்டு பாடுங்களேன் என கேட்கும் மாதிரி அந்த வீடியோவில் பதிவாகி இருக்கின்றது.
இதை பார்த்த பலரும் ஏண்டா இந்த தேவையில்லாத வேலை? இப்படி ஏ.ஐ தொழில்நுட்பத்தில் ஷோபாவை சர்ப்ரைஸ் பண்ணுவதற்கு பதிலாக நேரடியாகவே விஜய் தன் அம்மாவிற்கு வாழ்த்தை தெரிவித்து இருக்கலாமே? இதில் என்ன சர்ப்ரைஸ் இருக்கிறது? மேலும் ஒரு அம்மா நிலைமையில் இருந்து பார்க்கும்போது இந்த தொழில்நுட்பத்திற்கு பதிலாக நேரடியாக விஜயே ஒரு வீடியோ எடுத்து போட்டிருக்கலாமே என்று தான் அவருடைய மனநிலை இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இதையும் படிங்க: டேய் சண்டைக்கு வாடா!.. கவுண்டமணி காமெடி உருவானதன் பின்னணி இதுதான்!…
இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C67-vqWgpC4/?igsh=MXJ1ZzZpMnBpNGJyMA==