27 முறை விஜயுடன் மோதிய சூர்யா படங்கள்!... முதன் முதலில் 150 கோடியை குவித்த தளபதி படம்!..

by sankaran v |
27 முறை விஜயுடன் மோதிய சூர்யா படங்கள்!... முதன் முதலில் 150 கோடியை குவித்த தளபதி படம்!..
X

Surya , Vijay

தமிழ்த்திரை உலகில் இளம் நட்சத்திரங்களின் படங்களுக்கு இடையே அவ்வப்போது மோதல்கள் வந்த வண்ணம் இருக்கும். இது தான் ஆரோக்கியமான போட்டி. அந்த வகையில் விஜயும், சூர்யாவும் சமகால நடிகர்கள். இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இருவருக்கும் பல படங்கள் ஹிட் அடித்துள்ளன. தளபதி விஜய் படமும், சூர்யா படமும் 27 முறை நேரடியாக மோதியுள்ளன. ஜெயிச்சது யாருன்னு பார்ப்போம்.

1998ல் விஜய்க்கு பிரியமுடன், சூர்யாவுக்கு சந்திப்போமா படமும் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். 1999ல் விஜய்க்கு என்றென்றும் காதல், சூர்யாவுக்கு பெரியண்ணா ரிலீஸ். இதுல சூர்யா தான் வின்னர். 1999ல் விஜய்க்கு மின்சார கண்ணா, சூர்யாவுக்கு பூவெல்லாம் கேட்டுப்பார் படமும் ரிலீஸ். இதுல சூர்யா தான் வின்னர்.

Priyamanavale

Priyamanavale

2000த்தில் விஜய்க்கு ப்ரியமானவளே, சூர்யாவுக்கு உயிரிலே கலந்தது ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். 2001ல் விஜய்க்கு ஷாஜஹான், சூர்யாவுக்கு நந்தா ரிலீஸ். இதுல சூர்யா தான் வின்னர். 2002 சூர்யாவுக்கு உன்னை நினைத்து, விஜய்க்கு தமிழன் ரிலீஸ். இதுல சூர்யா தான் வின்னர்.

அதே ஆண்டில் விஜய்க்கு யூத், சூர்யாவுக்கு ஸ்ரீ படமும் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். அதே ஆண்டில் சூர்யாவுக்கு மௌனம் பேசியதே, விஜய்க்கு பகவதி, வசீகரா படங்கள் ரிலீஸ். இதுல சூர்யா தான் வின்னர். 2003 தீபாவளிக்கு விஜய்க்கு திருமலை, சூர்யாவுக்கு பிதாமகன் ரிலீஸ். இதுல ரெண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

2004ல் விஜய்க்கு கில்லி, சூர்யாவுக்கு பேரழகன், ஆய்த எழுத்து படங்கள் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். 2005ல் சூர்யாவுக்கு மாயாவி, விஜய்க்கு சச்சின், சுக்ரன் படங்கள் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். அதே ஆண்டில் சூர்யாவுக்கு கஜினி, விஜய்க்கு சிவகாசி படங்கள் ரிலீஸ். இதுல ரெண்டு படங்களுமே வெற்றி. அதே ஆண்டில் சூர்யாவுக்கு ஆறு, விஜய்க்கு ஆதி படங்கள் ரிலீஸ். இதுல சூர்யா தான் வின்னர்.

2007ல் விஜய்க்கு அழகிய தமிழ் மகன், இதுல விஜய் ரெட்டை வேடம். சூர்யாவுக்கு வேல் படமும் ரிலீஸ். இதுல சூர்யா தான் வின்னர். சூர்யா ரெட்டை வேடம். 2008ல் சூர்யாவுக்கு வாரணம் ஆயிரம், விஜய்க்கு வில்லு படங்கள் ரிலீஸ். இதுல சூர்யா தான் வின்னர்.

2009ல் விஜய்க்கு வேட்டைக்காரன், சூர்யாவுக்கு ஆதவன் ரிலீஸ். இதுல சூர்யா தான் வின்னர். 2010ல் சூர்யாவுக்கு சிங்கம், விஜய்க்கு சுறா படங்கள் ரிலீஸ். இதுல சூர்யா தான் வின்னர். 2010ல் விஜய்க்கு காவலன், சூர்யாவுக்கு ரத்த சரித்திரம் படங்கள் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர்.

Singam movie

Singam movie

2011ல் விஜய்க்கு வேலாயுதம், சூர்யாவுக்கு 7ம் அறிவு படங்கள் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். 2012ல் விஜய்க்கு துப்பாக்கி, சூர்யாவுக்கு மாற்றான் படங்கள் ரிலீஸ். சூர்யா மாறுபட்ட ரெட்டை வேடம். இதுல விஜய் தான் வின்னர். 2013ல் விஜய்க்கு தலைவா, சூர்யாவுக்கு சிங்கம்2 படங்களும் ரிலீஸ். இதுல சூர்யா தான் வின்னர்.

2014ல் விஜய்க்கு கத்தி, சூர்யாவுக்கு அஞ்சான் படங்கள் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். 2016ல் விஜய்க்கு தெறி, சூர்யாவுக்கு 24 படமும் ரிலீஸ். இதுல விஜய் தான் வெற்றி. விஜய் கேரியரிலேயே முதன் முதலாக 150 கோடியை வசூலில் அள்ளியது இந்தப் படம் தான். அதனால் விஜய் தான் வின்னர்.

2017ல் விஜய்க்கு பைரவா, சூர்யாவுக்கு சிங்கம் 3 படங்களும் ரிலீஸ். இதுல ரெண்டுமே வெற்றி தான். 2019ல் விஜய்க்கு பிகில், சூர்யாவுக்கு காப்பான் படம் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். 2020ல் விஜய்க்கு மாஸ்டர், சூர்யாவுக்கு சூரரைப் போற்று படமும் ரிலீஸ். இதுல ரெண்டுமே மிகப்பெரிய வெற்றி. 2022ல் சூர்யாவுக்கு எதற்கும் துணிந்தவன், விஜய்க்கு பீஸ்ட் படமும் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். 250 கோடியை வசூலில் அள்ளியது.

Next Story