More
Categories: Cinema News latest news

அடுத்த சூப்பர்ஸ்டார் இல்லைங்க!.. அடுத்த உலக நாயகனாகவே ஆகப் போகும் விஜய்!.. விளங்குமா?..

நடிகர் ரஜினிகாந்துக்கு போட்டியாக அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகப் பார்க்கிறார் விஜய் என்கிற விமர்சனம் இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் எழுந்து ஏகப்பட்ட ட்ரோல் மீம்களையும் சர்ச்சைகளும் நடிகர் ரஜினிகாந்தே ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் காக்கா – கழுகு கதையை சொல்லிட்டு, இதை எந்த நடிகருடன் ஒப்பிட்டு பேசாதீங்க என லீடு கொடுத்து சர்ச்சையை கிளப்பி வசூல் சாதனை படைத்து விட்டார்.

அடுத்த சூப்பர்ஸ்டாருக்கே அழைவீங்களா அடுத்த உலக நாயகன் பதவிக்கெல்லாம் இங்கே போட்டி போட ஆளே இல்லையா? என கிண்டல் செய்து வந்த நிலையில், அதற்கும் நான் இருக்கிறேன் என அசால்டு காட்ட அதிரடி முடிவை தளபதி விஜய் எடுத்து விட்டதாக கோடம்பாக்கமே அதிரும் அளவுக்கு சூப்பரான அப்டேட் ஒன்று தற்போது வந்துள்ளது.

Advertising
Advertising

இதையும் படிங்க: குடிக்க ஆரம்பிச்சா எக்ஸ்ட்ரீமுக்கு போயிடுவேன்!.. அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு கூப்பிடுவாங்க!.. உறைய வைத்த ஓவியா!..

இந்தியன் தாத்தாவுக்கே போட்டி: 

ரஜினிகாந்த், கமல்ஹாசனை எல்லாம் வயதை குறைத்துக் காட்ட டீ ஏஜிங் டெக்னாலஜியை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்க்கு போய் செய்து வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு தளபதி 68ல் வயதான விஜய்யை காட்ட இந்தியன் தாத்தா கமலுக்கே டஃப் கொடுக்கும் ஒரு லுக்கிற்கு முயற்சி செய்து வருவதாக அப்டேட்கள் கசிந்துள்ளன.

அந்த கதாபாத்திரத்துக்கு ஜோடியாகத்தான் நடிகை ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், மேக்கப் மூலம் எல்லாம் வயதான கெட்டப் போட்டால், சரியா வராது என சிஜி மூலம் வித்தியாசம் காட்ட மாநாடு படத்தை இயக்கிய வெங்கட் பிரபு முடிவு செய்து ஹாலிவுட் கலைஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: உலகமே கொண்டாடிய சம்பவம்! மௌனம் காத்த விஜய் – அதுக்கு இவர் சரிப்பட்டு வருவாரா?…

வெங்கட் பிரபுவின் விசித்திர ஆசை:

தளபதி 68 படம் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபு சொன்ன டபுள் ஆக்‌ஷன் கதையில் தந்தை மற்றும் மகனாக விஜய் நடிக்கப் போவதாகவும் அப்பா விஜய்யின் ரோல் அப்படியொரு கதாபாத்திரமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

பீஸ்ட் படத்தில் நெல்சன் விஜய்யை ஃபைட் ஜெட் எல்லாம் ஓட வைத்து புதிய எக்ஸ்பீரிமென்ட் பண்ண நிலையில், அது போல வெங்கட் பிரபு எக்ஸ்பீரிமென்ட் என்கிற பெயரில் தளபதியை வச்சு விளையாடிட மாட்டாரே என விஜய் தரப்பே கொஞ்சம் பீதியில் இருந்தாலும், வெங்கட் பிரபு மீது முழு நம்பிக்கையுடன் தலையை கொடுத்து இருக்கிறார் விஜய் என்கின்றனர்.

 

Published by
Saranya M

Recent Posts