உங்க ஃபேன்ஸ் தாங்குவாங்களா?!.. பெரிய அதிர்ச்சியை கொடுத்த தளபதி விஜய்...

vijay2
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய், இவரை தளபதி என ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். அப்பாவின் இயக்கத்தில் நடிக்க துவங்கி மெல்ல மெல்ல மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து முன்னணி நடிகராக மாறினார். இப்போது ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறிவிட்டார். இவரின் சம்பளம் ரூ.200 கோடி வரை அதிகரித்துள்ளது.
ஒருபக்கம், விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் அரசியல் தொடர்பான பணிகளையும் செய்து வருகிறார். அரசியலுக்கு வருகிறேன் என அவர் அறிவிக்கவில்லையே தவிர அவரின் மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு உதவி செய்வது, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது என அவரின் ரசிகர்கள் பல வேலைகளை செய்து வருகிறார்கள்.

vijay
சமீபத்தில் கூட பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை நேரில் வரவழைத்து அவர்களுக்கு பரிசு கொடுத்தார். இதையடுத்து விஜய் அரசியலுக்கு வரப்போவது உறுதி என எல்லோரும் பேச துவங்கிவிட்டனர்.
விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படம் முடிந்தபின் 3 வருடம் எந்த சினிமாவில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம். அதற்கு காரணம் 2026ம் ஆண்டு நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தல் என சொல்லப்படுகிறது. இதை வைத்து பார்க்கும்போது அவரின் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் விஜய் 3 வருடங்களுக்கு சினிமாவில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: இப்பவே பயந்து வருதே!.. 90ஸ் கிட்ஸை கதிகலங்க வைத்த 05 தமிழ் திகில் படங்கள்!..