செல்பி புள்ளையாகவே மாறிய விஜய்!.. ரசிகர்களுடன் எடுத்த அடுத்த வீடியோ.. இது செம வைரல்...
Vijay: கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்துக்கொள்ளும் செல்பி வீடியோ அவரின் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இது துவங்கியது மாஸ்டர் படத்தில்தான். அந்த படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்தபோது அவரை பார்ப்பதற்காக ஆயிரக்காணக்கான ரசிகர்கள் ஒன்று கூடினார்கள்.
எனவே, ஒரு வேன் மீது ஏறி அவர்களுடன் செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டார். இது பல லட்சம் லைக்குகளை பெற்றது. அதன்பின் சூழ்நிலை அமையும் போதெல்லாம் இதுபோல வீடியோக்களை எடுத்து விஜய் வெளியிட்டு வருகிறார். அதுவும் சமீபத்தில் அரசியலுக்கு வருவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: கட்சியின் பெயரை மாற்றப் போகும் தளபதி விஜய்… ரஜினியே ஆதரவாம்!.. இவர் சொல்வதை கேளுங்க!..
தன்னுடைய கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் எனவும், வருகிற 2026 சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு எனவும் அவர் கூறியிருக்கிறார். எனவே, கடந்த சில நாட்களாகவே இது தொடர்பான செய்திகள், விவாதங்கள் ஊடகங்களில் அதிகம் காண முடிகிறது. அதேபோல், கோட் படப்பிடிப்புக்காக விஜய் புதுச்சேரி சென்றிருந்த போது ரசிகர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட செல்பி வீடியோவும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு வீடியோவை இயக்குனர் வெங்கட்பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கோட் படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் அருகே விஜய் ரசிகர்கள் கூடிவிட வழக்கம்போல் அங்கிருந்த வேன் மீது ஏறி ரசிகர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட செல்பி வீடியோ இது. இந்த புகைப்படமும் விஜய் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
விஜயின் அரசியல் நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ள நிலையில் விஜயின் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் அவரை பார்க்க துடித்து வருகின்றனர். அதேநேரம், விஜய் ரசிகர்களின் ஓட்டுக்கள் மட்டுமே போதாது. பொதுமக்களும் ஓட்டு போட்டால் மட்டுமே விஜய் ஆட்சியை பிடிக்க முடியும் எனவும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
#TheGoat selfie in da making!!! pic.twitter.com/eFO4tp7Tlm
— venkat prabhu (@vp_offl) February 5, 2024
COPYRIGHT 2024
Powered By Blinkcms