அஜித் படத்தால் புலம்பிய விஜய்..... என்ன கூறினார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக உள்ள இரண்டு பெரிய சிகரங்கள் என்றால் அது விஜய் அஜித் ஆகிய இருவர் தான். இவர்கள் இருவருமே கிட்டத்தட்ட ஒன்றாக திரை வாழ்க்கையை தொடங்கி தற்போது இருவருமே உச்ச நடிகர்களாக உள்ளனர். ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்கும் நல்ல நண்பர்கள் என்பதற்கு உதாரணமாக ராஜாவின் பார்வையிலே படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
அதன்பின்னர் தற்போது வரை இவர்கள் இருவரும் இணைந்து எந்தவொரு படத்திலும் நடிக்கவில்லை. இருவரும் அவரவருக்கென தனி பாதையில் விலகி சென்று தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டனர். இவர்களின் ரசிகர்கள் மிகவும் வெறித்தனமான ரசிகர்கள். அஜித் விஜய் ஆகிய இருவரின் படமும் ஒரே நாளில் வெளியானால் அன்று தியேட்டர் உரிமையாளர்கள் மரண பீதியில் இருப்பார்கள்.

ajith deena
ஏனெனில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடும் என்பதால் அந்த சமயத்தில் தியேட்டர் ரணகளமாக இருக்கும். ஆனால் இவர்களது நடிப்பில் உருவான படங்கள் ஒரே நேரத்தில் மோதிக் கொண்ட சம்பவங்கள் எல்லாம் மிகவும் குறைவு தான். அப்படி இவர்களின் நடிப்பில் வெளியாகி மோதி கொண்ட படங்களில் முக்கியமான படங்கள் தான் தீனா மற்றும் ப்ரண்ட்ஸ்.
இருபடங்களும் ஒரே நாளில் வெளியான நிலையில் தீனா படத்திற்கு தியேட்டரில் கூட்டம் நிரம்பி வழிந்ததாம். ஆனால் விஜய் படத்துக்கு பெரிய அளவில் கூட்டமே இல்லையாம். இதனால் வருத்தத்தில் இருந்த விஜய் ப்ரண்ட்ஸ் படத்தின் தயாரிப்பாளரிடம் அஜித் படத்துக்கு மட்டும் எப்படி இவ்வளவு கூட்டம் என மிகவும் ஆதங்கத்தில் கேட்டுள்ளார்.

vijay-surya
உடனே விஜயை சமாதானப்படுத்திய தயாரிப்பாளர் கவலைப்படாதீங்க, அடுத்த வாரம் முதல் நம்ம படத்துக்கும் நல்ல கூட்டம் வரும் என கூறினாராம். அவர் சொன்னது போலவே ப்ரண்ட்ஸ் படத்திற்கு இரண்டாவது வாரத்தில் இருந்து நல்ல கூட்டம் வந்ததாம். லேட் பிக் அப் என்றாலும் ப்ரண்ட்ஸ் படமும் நல்ல வசூல் தான் செய்துள்ளது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.