தளபதி - 67 படத்தின் கதி...? லோகேஷின் திடீர் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணைய போவதாக அரசல் புரசலான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
விக்ரம் படத்தின் வெற்றி லோகேஷ் கனகராஜை பெரும் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. தமிழ் சினிமாவில் வேறு எந்த ஒரு படத்தயாரிப்பாளருக்கும் இல்லாத பரபரப்பை ஏற்படுத்தியவர் லோகேஷ் கனகராஜ்.
சமீபகாலமாக விமர்சகர்களும் பார்வையாளர்களும் ஏகமனதாகப் பாராட்டிய திரைப்படம் இது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கொஞ்ச நாள் சமூக ஊடகங்களில் இருந்து தான் விலகி இருக்கப் போவதாக திடீர் முடிவை அறிவித்துள்ளார். மேலும் தனது புதிய பட அறிவிப்புடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே தனது புதிய படத்தின் கதையை இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே எழுத ஆரம்பித்து விட்டார் என சில தகவல்கள் வெளியானது. ஒருவேளை படத்தின் கதையை எழுதுவதற்கு இந்த இடைவேளி எடுத்து இருப்பார் என ரசிகர்கள் தங்களை தேற்றி வருகிறார்கள். லோகேஷின் அடுத்த அவதாரம் விஜயின் கூட்டணியில் தான் என முக்கால் வாசி அறிவிப்பு வந்த நிலையில் இந்த இடைவேளி விஜயின் தளபதி - 67 படத்திற்காக கூட இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.