தளபதி - 67லும் தொடரும் கட்டா குஸ்தி!.. விடாமல் துரத்தும் அஜித்!..

ajith
தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாகவே வாரிசு, துணிவு படங்களின் போட்டா போட்டி நடந்து வருகிறது. அந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் ஆரம்பமானதில் இருந்தே ரசிகர்கள் மனதில் நீயா நானா போட்டி ஆரம்பாகிவிட்டது. அதே போல் இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் ஐதராபாத்தில் தான் நடந்தன.
அப்போது கூட விஜய் அஜித் இருவர்கள் சந்திப்பார்களா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் நிலவியது. மேலும் அந்த இரண்டு படங்களின் போஸ்டர்கள் முதல் சிங்கிள்ஸ் வரை போட்டி போட்டு இணையத்தில் வெளியிட்டு வந்தனர்.
மேலும் அஜித் விஜய் இவர்களின் புகைப்படங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மாறி மாறி இணையத்தில் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் துணிவு படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அஜித் விடுமுறை பயணமாக வெளியூர் செல்கிறார்.

vijay
இதையும் படிங்க : மூன்று ஆண்டு கால உழைப்பு!.. தன் தலைவனுக்காக விட்டுக் கொடுப்பாரா லாரன்ஸ்?..
வாரிசு படமும் கூடிய சீக்கிரம் முடியும் தருவாயில் உள்ளன. வாரிசு படத்தை அடுத்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி-67ல் இணைய உள்ளார். அதற்கான வேலைகளில் லோகேஷ் இருக்க படத்தின் பூஜை வரும் டிசம்பர் 5 ஆம் தேதி ஆரம்பிக்கிறார்களாம்.
மேலும் படத்திற்கான புரோமோ வீடியோ ஒன்றையும் எடுக்க இருக்கிறார்களாம். அந்த வீடியோவிற்கான படப்பிடிப்பு டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ளதாம். இந்த தகவல் அறிந்தே ரசிகர்கள் பெரும்பாலும் ஆரவாரத்தில் இருக்கின்றனர். சும்மாவே அப்டேட்கள் என்று ஏங்கி வரும் ரசிகர்களுக்கு இது ஒரு பிரசாதம் போல தான் இருக்கும்.

ajith
இதுவே தளபதி - 67 பூஜை நாளில் சொல்லவா வேண்டும்? சும்மா இணையத்தை தெறிக்க விடப் போகிறார்கள் என்று ஒரு புறம் சொன்னாலும் அதற்கு இடம் கொடுக்காத அளவுக்கு அஜித்தின் துணிவு படத்தின் சிங்கிள் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாக உள்ளதாக சில தகவல் வெளியாகியுள்ளது. இதிலயும் அஜித் முந்திக் கொண்டு தான் இருக்கிறார் என்று சில தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.