தளபதி - 67 படத்தின் அடுத்தடுத்த ஆச்சரியங்கள்...! பெரிய சம்பவத்தை எதிர்பார்த்து நிற்கும் லோகேஷ்...

by Rohini |
VIJAY_mian_cine
X

தளபதி விஜய் தற்போது தனது 66 வது படமான வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

vijay1_cine

விஜய், ராஷ்மிகா இவர்களுடன் சேர்ந்து நடிகர் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சங்கீதா, யோகிபாபு போன்ற பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகும் இந்த படம் ஒரு குடும்ப படமாக அமைய இருக்கிறது.

vijay2_cine

படத்தின் படப்பிடிப்பு முக்கால் வாசி முடிந்த நிலையில் இந்த படத்தை அடுத்து விஜயின் 67 ஆவது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ஏற்கெனவே தளபதி-67ல் 6 வில்லன்களாக சஞ்சய் தத், பிரித்விராஜ் உட்பட மற்றும் சிலரும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருக்கிறார் என்பதும் செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது.

vijay3_cien

மற்றுமொரு செய்தியாக இன்னொரு கதாநாயகியாக பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது. மேலும் மும்பையில் உள்ள கேங்ஸ்டர் படமாக தளபதி - 67 அமையலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. கூடிய சீக்கிரம் லோகேஷ் இதைபற்றி தெரிவிப்பார் என ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட ஒரு பெரிய சம்பவத்தை இந்த ஆண்டு இறுதியில் விஜய்- லோகேஷ் கூட்டணியில் பார்க்கலாம் என தெரிகிறது.

Next Story