Connect with us
VIJAY_mian_cine

Cinema News

தளபதி – 67 படத்தின் அடுத்தடுத்த ஆச்சரியங்கள்…! பெரிய சம்பவத்தை எதிர்பார்த்து நிற்கும் லோகேஷ்…

தளபதி விஜய் தற்போது தனது 66 வது படமான வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

vijay1_cine

விஜய், ராஷ்மிகா இவர்களுடன் சேர்ந்து நடிகர் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சங்கீதா, யோகிபாபு போன்ற பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகும் இந்த படம் ஒரு குடும்ப படமாக அமைய இருக்கிறது.

vijay2_cine

படத்தின் படப்பிடிப்பு முக்கால் வாசி முடிந்த நிலையில் இந்த படத்தை அடுத்து விஜயின் 67 ஆவது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ஏற்கெனவே தளபதி-67ல் 6 வில்லன்களாக சஞ்சய் தத், பிரித்விராஜ் உட்பட மற்றும் சிலரும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருக்கிறார் என்பதும் செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது.

vijay3_cien

மற்றுமொரு செய்தியாக இன்னொரு கதாநாயகியாக பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது. மேலும் மும்பையில் உள்ள கேங்ஸ்டர் படமாக தளபதி – 67 அமையலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. கூடிய சீக்கிரம் லோகேஷ் இதைபற்றி தெரிவிப்பார் என ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட ஒரு பெரிய சம்பவத்தை இந்த ஆண்டு இறுதியில் விஜய்- லோகேஷ் கூட்டணியில் பார்க்கலாம் என தெரிகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top