Cinema News
எம்.ஜி.ஆர் மாதிரி வரணும்! ஆனா அவர் செஞ்சத செய்ய மாட்டேன்!.. விஜய் செய்வது சரியா?…
Leo Movie: விஜயின் நடிப்பில் வரும் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் வெளிவர இருக்கிறது. ஒட்டுமொத்த ரசிகர்களும் லியோ படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். லோகேஷ் இயக்கத்தில் விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம்தான் லியோ.
இந்தப் படத்தில் விஜயுடன் சேர்ந்து அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன் ஆகியோ நடிக்கிறார்கள். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் மூன்று சிங்கிள்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான ஹைப்பை அதிகரித்திருக்கின்றன.
இதையும் படிங்க: ஆல் ஷோ ஹவுஸ்புல்!.. ரீ ரிலீஸிலும் கல்லா கட்டும் வட சென்னை!.. இவ்வளவு கூட்டமா?!…
இந்த நிலையில் லியோ படத்திற்காக மொத்தமாக ஒரு நாளைக்கு 5 காட்சிகள் மட்டுமே திரையரங்குகள் அனுமதிக்க வேண்டும் என்றும் முதல் காட்சியை காலை 9 மணிக்கு ஆரம்பித்து இரவு 1.30 மணிவரைக்குள் மொத்த காட்சியையும் முடிக்க வேண்டும் எனவும் அரசாணை பிறப்பித்திருந்தது.
ஆனால் முதல் காட்சியை அதிகாலை 4 மணிக்கு ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு படக்குழு நீதிமன்றத்தை அணுகப்போவதாக ஒரு செய்தி வெளியானது.இதற்கிடையில் லியோ படத்திற்கான டிக்கெட் விலை பிரச்சினைகளும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.
இதையும் படிங்க: விடாமுயற்சிக்கு வந்த சிக்கல் மட்டும் இல்ல! கலை இயக்குனர் மிலனின் மறைவால் சிக்கி தவிக்கும் படங்கள்
ஆவடியில் ஒரு திரையரங்கில் ஒரு டிக்கெட் விலை 1000 மற்றும் 2000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கூறி விஜய் ரசிகர்களே போராட்டம் நடத்துவதாகவும் செய்திகள் வெளியானது. இப்படி லியோ படத்தின் மீதான ஏதாவது ஒரு சர்ச்சை வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதே மாதிரியான ஒரு சம்பவம் அந்தக் காலத்தில் எம்ஜிஆருக்கும் நடந்ததாம். அவரின் படங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறி எம்ஜிஆரிடம் போய் முறையிட்டிருக்கின்றனர். ஆனால் எம்ஜிஆர் அவரது ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தாராம்.
இதையும் படிங்க: விடாப்பிடியா நிற்கும் லியோ படக்குழு… நீங்க தரலனா என்ன? கோர்ட் படியேறியே லலித்..
அரசு நிர்ணயித்த விலைக்கே ரசிகர்கள் டிக்கெட் வாங்கி படத்தை பார்க்க வேண்டும் என்றும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டாம் என்றும் கட்டளையிட்டாராம். அதன் படியே ரசிகர்களும் நடந்து கொண்டார்களாம்.
ஆனால் இங்கு விஜய் அந்த மாதிரி ஏதேனும் செய்தாரா? எம்ஜிஆர் போல் அரசியலில் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று நினைக்கும் விஜய் எம்ஜிஆர் அவரது ரசிகர்களுக்காக செய்ததை ஏன் செய்யவில்லை என்றும் கோடம்பாக்கத்தில் கூறிவருகின்றார்கள்.